முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு வந்த தமன்னா, தற்போது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க நடிப்பதோடு, காமெடி படங்களிலும் நடிக்க வேண்டும் என்று ஆர்வம் காட்டி வருகிறார். அவரது இரண்டு விருப்பங்களும் ஒரே படத்தில் பூர்த்தியடை வைத்திருக்கிறது ‘பெட்ரோமாக்ஸ்’ படம்.
ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள திகில் கலந்த முழுநீள காமெடி திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தில் தமன்னா, முதன்கை கதாபாத்திரத்தில் நடிக்க, அவருடன் பிரேம், முனிஷ்காந்த், யோகி பாபு, காளி வெங்கட், சத்யன் உள்ளிட்ட பல நகைச்சுவை நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
ரோகின் வெங்கடேஷன் இயக்கியிருக்கும் இப்படம் திகில் படமாக இருந்தாலும், இதுவரை இல்லாத ஒரு காமெடிப் படமாக இருக்கும், என்று இயக்குநர் ரோகின் கூறியிருக்கிறார்.
மேலும், தமன்னா நடிப்பில் வெளியாகும் முதல் ஹீரோயின் சப்ஜக்ட் என்பதாலும் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் வரும் அக்டோபர் 11 ஆம் தேதி வெளியாகிறது.
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட ’அமரன்’ திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது...
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...