கமல்ஹாசனின் மூத்த நடிகையான ஸ்ருதி ஹாசன், இசையில் அதிகம் ஆர்வம் கொண்டவராக இருந்தார். பல்வேறு இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்த இவர், ’உன்னைப் போல் ஒருவன்’ படத்திற்கு இசையும் அமைத்தார். பிறகு பாலிவுட் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர், தமிழில் அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்தார்.
திடீரென்று படங்கள் நடிப்பதை குறைத்துக் கொண்ட ஸ்ருதி ஹாசன், வெளிநாட்டை சேர்ந்த நடிகர் மைக்கேல் என்பவரை காதலிக்க தொடங்கியதோடு, அவரை திருமணம் செய்துகொள்ள தனது பெற்றோரிடம் சம்மதம் பெற்ற நிலையில், திடீரென்று காதலரை பிரிந்துவிட்டார். காதல் தோல்வி குறித்து இதுவரை பேசாமல் இருந்த ஸ்ருதி ஹாசன், தற்போது தனது காதல் குறித்து சில ஊடகங்களுக்கு பேட்டியளித்து வருகிறார்.
அவர், தனது காதல் தோல்வி குறித்து கூறுகையில், நல்லவர்கள் கூட சில நேரங்களில் தவறு செய்கிறார்கள். அப்படி தான் எனது காதலிலும் நடந்தது. இருந்தாலும் எனக்காக ஒருவருக்காக காத்திருக்கிறேன். அவரை விரைவில் உங்களுக்கு அறிமுகப்படுத்துவேன், என்று தெரிவித்துள்ளார்.
மேலும், பேட்டி ஒன்றில் தான் மது போதைக்கு அடிமையாக இருந்தேன், என்று கூறி அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளார்.
இது பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ள ஸ்ருதி, “ஆமாம்.. ஒரு காலத்தில் நான் விஸ்கி loverஆக இருந்தேன். ஆனால் தற்போது அனைத்தையும் நிறுத்திவிட்டேன். எனக்கு உடல்நலம் அதிகம் பாதிக்கப்பட்டது. அது பற்றி வெளியில் நண்பர்களிடம் கூட தெரிவிக்கவில்லை. சிகிச்சை எடுத்துக்கொண்டு தற்போது சரியாக முயற்சித்து வருகிறேன். மற்றவர்கள் என்ன சொல்வார்கள் என கவலை இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
ஸ்ருதி ஹாசனின், இந்த பதிவுக்கு கமெண்ட் கொடுக்கும் ரசிகர்கள், காதல் வெற்றி மற்றும் தோல்வி இரண்டையுமே ஸ்ருதி ஹாசன் விஸ்கி மூலம் தான் கொண்டாடி இருப்பார் போல. தற்போது இரண்டிலும் இருந்து வெளியேறியவர், விஸ்கி போதையில் இருந்தும் வெளியேறிவிட்டாரோ!, என்று கமெண்ட் தெரிவித்து வருகிறார்கள்.
’ராக்கெட் பாய்ஸ்’ (Rocket Boys), ‘ஜாட்’ (Jaat), ’ஃபர்ஷி’ (Farzi), ‘கேசரி - சாப்டர் 1’ (Kesari Chapter 2) போன்ற பிரபல ஹிந்தி வெப் சீரிஸ் மற்றும் திரைப்படங்களில் தனது துடிப்பான நடிப்பால் கவனம் பெற்ற ரெஜினா கசான்ட்ரா, இந்திய சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான மதுர் பந்தார்க்கருடன் புதிய படத்தில் நடிக்க தயாராக இருக்கிறார்...
அமோகம் ஸ்டுடியோஸ் மற்றும் வொயிட் லேம்ப் பிக்சர்ஸ் கே...
ஆக்சன் காட்சிகளுக்கான படப்பிடிப்பு நடைபெற்ற போது சண்டை பயிற்சி கலைஞரான மோகன்ராஜ் எதிர்பாராவிதமாக உயிரிழந்தார்...