தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் காமெடி நடிகராக உருவெடுத்திருக்கும் யோகி பாபு, கதையின் நாயகனாக நடித்த ‘கூர்கா’ மற்றும் ‘தர்மபிரபு’ ஆகிய இரண்டு படங்களும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றதால், அவர் ஒரு காட்சியில் நடித்த படங்களில் கூட அரை ஹீரோ அளவுக்கு முன்னிலைப் படுத்தி விளம்பரம் செய்கிறார்கள்.
இதற்கு சமீபத்தில் அப்ஜக்ஷன் தெரிவித்த யோகி பாபு, தற்போது தான் எந்த படத்திலும் ஹீரோவாக நடிக்கவில்லை, அப்படி ஒரு செய்தி வெளியானால் அதை நம்ப வேண்டாம், என்று விளக்கம் அளித்திருந்தார்.
மேலும், ஒரு படத்தில் 11 கெட்டப்புகளில் நடித்து வரும் யோகி பாபு, கதையின் நாயகனாக நடிப்பதோடு, காமெடி வேடங்களிலும் தொடர்ந்து நடிப்பேன், என்றும் ஸ்டேட்மெண்ட் கொடுத்திருக்கிறார்.
தற்போது, யோகி பாபு ஒரு நாளைக்கு ரூ.10 லட்சம் சம்பளம் வாங்குவதாக கோலிவுட்டில் பேச்சு அடிபடுவதோடு, ஏகப்பட்ட படங்களை கையில் வைத்திருப்பவர், தூங்குவதற்கு கூட நேரமில்லாமல் ஓடி...ஓடி...நடித்துக் கொண்டிருக்கிறாராம்.
இந்த நிலையில், நடிப்பில் பிஸியாக இருக்கும் யோகி பாபு, வேறு எதிலும் கவனம் செலுத்த முடியாமல் இருப்பதோடு, தான் நடிக்கும் படம் சம்மந்தமான நிகழ்வுகளையும் தவிர்க்க தொடங்கியுள்ளாராம். அதேதான், அஜித் செய்வது போலவே தான். தற்போது தான் நடிக்கும் படங்களில் தயாரிப்பாளர்கள் ”பத்திரிகையாளர் சந்திப்பு வைக்கலாம், தேதியும், நேரமும் சொல்லுங்க” என்று யோகி பாபுவிடம் கேட்டால், “அதெல்லாம் வேண்டாம், படத்தை முடிங்க, ரிலீஸுக்கு மூன்று அல்லது இரண்டு நாட்களுக்கு முன்பு மொத்தமாக ஒரு பிரஸ் மீட் வைங்க, அதில் வந்து கலந்துக்க முயற்சிக்கிறேன். மற்றபடி, டிவி ரிப்போர்ட்டர்கள், இணையதள ரிப்போர்ட்டர்கள், தினசரி பத்திரிகையாளர்கள் என தனி தனியாக வைக்க வேண்டாம். அப்படி வைத்தாலும் என்னை அழைக்காதீர்கள் நான் வர மாட்டேன், ஒரே ஒரு பிரஸ் மீட்டுக்கு மட்டும் நான் வருகிறேன், அதுவும் படம் ரிலீஸின் போது வைத்தால் மட்டுமே வருவேன்” என்று பதிலளிக்கிறாராம்.
மாஸ் ஹீரோவாக அஜித் தான் இப்படி பண்றாருனா காமெடி நடிகர்கள் கூட, இப்படி அஜித் பாணியை பின்பற்றினா, பிறகு படத்தை எப்படி தான் விளம்பரம் செய்வது, என்று தயாரிப்பாளர்கள் புலம்ப தொடங்கியிருக்கிறார்களாம்.
’ராக்கெட் பாய்ஸ்’ (Rocket Boys), ‘ஜாட்’ (Jaat), ’ஃபர்ஷி’ (Farzi), ‘கேசரி - சாப்டர் 1’ (Kesari Chapter 2) போன்ற பிரபல ஹிந்தி வெப் சீரிஸ் மற்றும் திரைப்படங்களில் தனது துடிப்பான நடிப்பால் கவனம் பெற்ற ரெஜினா கசான்ட்ரா, இந்திய சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான மதுர் பந்தார்க்கருடன் புதிய படத்தில் நடிக்க தயாராக இருக்கிறார்...
அமோகம் ஸ்டுடியோஸ் மற்றும் வொயிட் லேம்ப் பிக்சர்ஸ் கே...
ஆக்சன் காட்சிகளுக்கான படப்பிடிப்பு நடைபெற்ற போது சண்டை பயிற்சி கலைஞரான மோகன்ராஜ் எதிர்பாராவிதமாக உயிரிழந்தார்...