விஜயின் ‘பிகில்’ தீபாவளிக்கு வெளியாக உள்ளது. அதற்கான பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வரும் நிலையில், விஜய் தனது அடுத்தப் படத்தில் நடிக்க தொடங்கிவிட்டார். இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தை ‘தளபதி 64’ என்று அழைக்கின்றனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தை விஜயின் உறவினரான சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார். இதில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களிலேயே இப்படத்தின் சாட்டிலைட் உரிமை தொடர்பான வியாபாரம் தொடங்கியுள்ளது. சன் தொலைக்காட்சி இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்க ஆர்வம் காட்டி அதற்கான பேச்சு வார்த்தையிலும் ஈடுபட்டு வந்தது.
இந்த நிலையில், ‘தளபதி 64’ படத்தை ரூ.32 கோடிக்கு சன் தொலைக்காட்சி வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் மட்டும் இன்றி விஜய் சேதுபதியும் இருப்பதால் தான் இந்த பெரிய தொகைக்கு டீல் முடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு, புதிதாகக் கட்டப்பட்ட 50 ஜோய் இல்லங்களை' (Joy Homes) ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை வழங்கியுள்ளது...
ஏசிஎம் சினிமாஸ் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரிக்க, திரைப்பட கல்லூரி மாணவரான ஜெகன் ராயன் எழுதி இயக்கியுள்ள படம் ’ரூம் பாய்’...
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...