இயக்குநர் கே.வி.ஆனந்த் - சூர்யா நடிப்பில் வெளியான ‘காப்பான்’ ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றது. சூர்யாவின் படங்களில் சிறப்பான ஓபனிங் படங்களின் வரிசையில் இணைந்துக் கொண்ட ‘காப்பான்’ தமிழகம் மட்டும் இன்றி கேரளா உள்ளிட பிற மாநிலங்க்ளிலும், வெளிநாடுகளிலும் வசூலில் புதிய சாதனைகளை நிகழ்த்தியது.
இந்த வெற்றியை படக்குழு சமீபத்தில் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் கேக் வெட்டி கொண்டாடினார்கள். இதில் இயக்குநர் கே.வி.ஆனந்த், சூர்யா, ஆர்யா, சாயிஷா, இசையமைப்பாளர் ஹாரிஷ் ஜெயராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டார்கள்.
வசூலில் சாதனைப் படைத்ததோடு, தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாய சங்கங்களின் பாராட்டையும் பெற்ற ‘காப்பான்’ படம் நிகழ்த்திய சாதனையால், படத்தை தயாரித்த லைகா நிறுவன்மும் பெருமை கொண்டுள்ளது.
மேலும், ரூ.100 கோடி வசூலை தாண்டிய படங்களின் பட்டியலில் ‘காப்பான்’ படமும் இணைந்திருப்பதாக அறிவித்திருக்கும் லைகா புரொடக்ஷன்ஸ், இந்த வெற்றியை கொடுத்த காப்பான் படத்தில் பணியாற்றிய அனைத்து நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளது.
’ராக்கெட் பாய்ஸ்’ (Rocket Boys), ‘ஜாட்’ (Jaat), ’ஃபர்ஷி’ (Farzi), ‘கேசரி - சாப்டர் 1’ (Kesari Chapter 2) போன்ற பிரபல ஹிந்தி வெப் சீரிஸ் மற்றும் திரைப்படங்களில் தனது துடிப்பான நடிப்பால் கவனம் பெற்ற ரெஜினா கசான்ட்ரா, இந்திய சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான மதுர் பந்தார்க்கருடன் புதிய படத்தில் நடிக்க தயாராக இருக்கிறார்...
அமோகம் ஸ்டுடியோஸ் மற்றும் வொயிட் லேம்ப் பிக்சர்ஸ் கே...
ஆக்சன் காட்சிகளுக்கான படப்பிடிப்பு நடைபெற்ற போது சண்டை பயிற்சி கலைஞரான மோகன்ராஜ் எதிர்பாராவிதமாக உயிரிழந்தார்...