பிக் பாஸ் சீசன் 3 முடிவடைந்துவிட்ட நிலையில், தற்போது போட்டியாளர்கள் ஜாலியாக ஊர் சுற்ற தொடங்கியுள்ளார்கள். இதில் கலந்துக் கொண்ட பலருக்கு சினிமா பட வாய்ப்புகளும் கிடைத்து வருவதோடு, பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் அழைப்புகள் வருகிறது.
தற்போது விஜய் டிவி கைகாட்டும் ஊடகங்களுக்கு மட்டும் பேட்டி கொடுத்து வரும் பிக் பாஸ் பிரபலங்கள் சிலரை ஒன்றிணைத்து பிரபல தயாரிப்பாளர் ஒருவர் படம் தயாரிக்க முடிவு செய்திருக்கிறார். ‘காதல் தேசம்’ போல கல்லூரி பின்னணியை கொண்ட இந்த படத்தில், பிக் பாஸில் ரசிகர்களை கவர்ந்த இளசுகளை நடிக்க வைக்கவும் அவர் முடிவு செய்திருக்கிறாராம்.
இதற்காக, பிக் பாஸ் பிரபலங்களுக்கு வலை விரித்திருக்கும் தயாரிப்பாளர், படத்தை மிக பிரம்மாண்டமான முறையில், கலர்புல்லாக தயாரிக்கவும் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவர் யார், எந்த எந்த பிக் பாஸ் பிரபலங்களுக்கு வலை வீசியிருக்கிறார், என்பது குறித்து அடுத்த செய்தியில் பார்ப்போம்.
தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு, புதிதாகக் கட்டப்பட்ட 50 ஜோய் இல்லங்களை' (Joy Homes) ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை வழங்கியுள்ளது...
ஏசிஎம் சினிமாஸ் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரிக்க, திரைப்பட கல்லூரி மாணவரான ஜெகன் ராயன் எழுதி இயக்கியுள்ள படம் ’ரூம் பாய்’...
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் எஸ்...