பிக் பாஸ் சீசன் 3 முடிவடைந்த நிலையில், போட்டியாளர்களாக பங்கேற்றவர்கள் பலருக்கு சினிமா பட வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. அந்த வகையில், கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ வில் நடிக்க வாய்ப்பு பெற்றதோடு, கமலின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் நிறுவனம் தயாரிக்கும் மூன்று படத்தில் தர்ஷன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம்.
அதேபோல், அபிராமியும் ஒரு படத்தில் ஹீரோயிக ஓப்பந்தமாகியிருக்க, முகேனுடன் பலர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளார்களாம். தற்போது மலேசியா சென்றுள்ள முகேன், சில மாதங்களுக்கு பிறகு சென்னை வந்து திரைப்படங்களில் நடிக்கும் முயற்சியில் ஈடுபட உள்ளாராம்.
இந்த நிலையில், இளம் திறமையாளர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பளித்த வரும் நடிகர் சிவகார்த்திகேயன் தனது சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மூலம் பிக் பாஸ் கவினை ஹீரோவாக வைத்து படம் ஒன்றை தயாரிக்க இருக்கிறாராம்.
பிக் பாஸில் பங்கேற்பதற்கு முன்பாகவே ‘நட்புனா என்னானு தெரியுமா’ படத்தில் ஹீரோவாக நடித்த கவின், தற்போது இரண்டு படங்களில் ஹீரோவாக ஒப்பந்தமாகியிருப்பதோடு, மூன்றாவது படமாக சிவகார்த்திகேயன் தயாரிக்கும் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளாராம்.
’ராக்கெட் பாய்ஸ்’ (Rocket Boys), ‘ஜாட்’ (Jaat), ’ஃபர்ஷி’ (Farzi), ‘கேசரி - சாப்டர் 1’ (Kesari Chapter 2) போன்ற பிரபல ஹிந்தி வெப் சீரிஸ் மற்றும் திரைப்படங்களில் தனது துடிப்பான நடிப்பால் கவனம் பெற்ற ரெஜினா கசான்ட்ரா, இந்திய சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான மதுர் பந்தார்க்கருடன் புதிய படத்தில் நடிக்க தயாராக இருக்கிறார்...
அமோகம் ஸ்டுடியோஸ் மற்றும் வொயிட் லேம்ப் பிக்சர்ஸ் கே...
ஆக்சன் காட்சிகளுக்கான படப்பிடிப்பு நடைபெற்ற போது சண்டை பயிற்சி கலைஞரான மோகன்ராஜ் எதிர்பாராவிதமாக உயிரிழந்தார்...