ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டவர்கள் பிரசித்திப் பெற்ற கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்துவதோடு, இசை மூலமாகவும் ஆன்மீகத்தை அடைவதுண்டு. அதனால் தான், இசைத் துறையில் ஆன்மீகத்திற்கு என்று தனி இடம் தற்போதும் இருந்துக்கொண்டே இருக்கிறது.
அந்த வகையில், ஆன்மீக இசைத்துறையில் இதுவரை யாரும் செய்யாத ஒன்றை, பாடகர் ராம் ஸ்ரீதர், இசையமைப்பாளர் தஷியுடன் இணைந்து செய்திருக்கிறார்.
இசையமைப்பாளர் தஷி இசையில், பாடகர் ராம் ஸ்ரீதர் குரலில் உருவாகியுள்ள ‘சீரடி சாய் புட்டபர்த்தி சாய் மகிமைகள்’ ஆன்மீக இசை ஆல்பம் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
ஐந்து பாடல்களை கொண்ட இந்த இசை ஆல்பத்தை காமெடி நடிகர் போண்டா மணி வெளியிட, நடிகர் கலக்கல் ஸ்டார் பரமேஸ்வரர் பெற்றுக்கொண்டார். இதில், பாடலாசிரியர் எழில் வேந்தன், இசை சேர்ப்பு இன்சார்ஜ் எம்.எஸ்.வி.சந்த்ரு, மாஸ்டர் லிங்கேஷ், பி.ஆர்.ஓ கோவிந்தராஜ் ஆகியோர் கலந்துக் கொண்டார்கள்.
சீரடி சாய் பாபா மற்றும் புட்டபர்த்தி சாய் பாபா ஆகியோரை ஒன்றினைத்து உருவான முதல் ஆன்மீக இசை ஆல்பம் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.
அறிமுக நடிகைகள் தேவல்ல கவிதா, அன்னா ஆஷா, கீர்த்தி, சங்கீதா ஆகியோர் கதையின் நாயகிகளாக நடித்திருக்கும் ’எஸ் கே எஸ்’ (SKS) திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது...
தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு, புதிதாகக் கட்டப்பட்ட 50 ஜோய் இல்லங்களை' (Joy Homes) ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை வழங்கியுள்ளது...
ஏசிஎம் சினிமாஸ் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரிக்க, திரைப்பட கல்லூரி மாணவரான ஜெகன் ராயன் எழுதி இயக்கியுள்ள படம் ’ரூம் பாய்’...