இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த அல் ரவுண்டராக திகழ்ந்த இர்பான் பதான், விக்ரம் படத்தில் நடிகராக அறிமுகமாகிறார். இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்திற்கு தற்காலிகமாக ‘விக்ரம் 58’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
அஜய் ஞானமுத்து இயக்கும் இப்படத்தில் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிப்பதாக படக்குழு நேற்று அறிவித்துள்ளது. இதையடுத்து, இர்பான் பதான் என்ன வேடத்தில் நடிப்பார்? என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்துள்ளது.
மேலும், படத்தில் இர்பான் பதான் அநேகமாக வில்லன் வேடத்தில் நடிக்கலாம் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. விக்ரம் பலவிதமான கெட்டப்புகளில் நடிக்கும் இப்படம் ஆக்ஷன் த்ரில்லர் ஜானர் படமாக உருவாக உள்ளது.
பல வெளிநாடுகளில் படமாக உள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படம் குறித்த மேலும் பல அறிவிப்புகளை படக்குழு விரைவில் அறிவிக்க உள்ளது.
’ராக்கெட் பாய்ஸ்’ (Rocket Boys), ‘ஜாட்’ (Jaat), ’ஃபர்ஷி’ (Farzi), ‘கேசரி - சாப்டர் 1’ (Kesari Chapter 2) போன்ற பிரபல ஹிந்தி வெப் சீரிஸ் மற்றும் திரைப்படங்களில் தனது துடிப்பான நடிப்பால் கவனம் பெற்ற ரெஜினா கசான்ட்ரா, இந்திய சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான மதுர் பந்தார்க்கருடன் புதிய படத்தில் நடிக்க தயாராக இருக்கிறார்...
அமோகம் ஸ்டுடியோஸ் மற்றும் வொயிட் லேம்ப் பிக்சர்ஸ் கே...
ஆக்சன் காட்சிகளுக்கான படப்பிடிப்பு நடைபெற்ற போது சண்டை பயிற்சி கலைஞரான மோகன்ராஜ் எதிர்பாராவிதமாக உயிரிழந்தார்...