கே.பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான ‘சித்து பிளஸ் 2’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான சாந்தினி, தொடர்ந்து பட படங்களில் ஹீரோயினாக நடித்ததோடு, ‘ராஜா ரங்குஸ்கி’ படத்தில் வில்லியாக நடித்தும் மிரட்டினார்.
திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வரும் சாந்தினி, சினிமா மட்டும் இன்றி சின்னத்திரை, வெப் சீரிஸ் என அனைத்து ஏரியாவிலும் பிஸியாக நடித்து வரும் நிலையில், தற்போது எஸ்.ஜே.சூர்யா தயாரித்து ஹீரோவாக நடிக்கும் படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தமாகியிருக்கிறார்.
கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து கதை எழுதும் இயக்குநர்களில் முக்கியமானவராக இருக்கும் ராதாமோகன் இயக்கும் இப்படம் சாந்தினியின் சினிமா வாழ்க்கையில் மிக முக்கியமான படமாக இருப்பதோடு, அவரது நடிப்பை வேறு தளத்தில் கொண்டு செல்லும் படமாகவும் இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மேலும், பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் சாந்தினி ஹீரோயினாக நடித்து வரும் படமும் முடியும் தருவாயில் உள்ளது. இப்படமும் சாந்தினியின் சினிமா கேரியரில் மிக முக்கியமான படமாக இருக்கும்.
அறிமுக நடிகைகள் தேவல்ல கவிதா, அன்னா ஆஷா, கீர்த்தி, சங்கீதா ஆகியோர் கதையின் நாயகிகளாக நடித்திருக்கும் ’எஸ் கே எஸ்’ (SKS) திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது...
தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு, புதிதாகக் கட்டப்பட்ட 50 ஜோய் இல்லங்களை' (Joy Homes) ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை வழங்கியுள்ளது...
ஏசிஎம் சினிமாஸ் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரிக்க, திரைப்பட கல்லூரி மாணவரான ஜெகன் ராயன் எழுதி இயக்கியுள்ள படம் ’ரூம் பாய்’...