மாநில அரசின் வரிவிலக்கு சலுகையை பெறுவதற்கே பெரிய போராட்டத்தை நடத்தும் நிலையில், நடிகர் சிம்பு படத்திற்கு மத்திய அரசின் ஜி.எஸ்.டி வரியில் விலக்கு அளிக்கப்பட்டிருப்பது அனைவரது புருவத்தையும் உயர்த்தச் செய்துள்ளது.
சிம்பு, நயந்தரா நடிப்பில் வெளியான ‘இது நம்ம ஆளு’ படம் தெலுங்கில் ‘சரஸுடு’ என்ற வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி வெளியாகிறது. இப்படம் அப்படியே டப்பிங் செய்யாமல், தமிழில் எடுக்கும் போதே தெலுங்குவுக்காகவும் சேர்த்து காட்சிகள் படமாக்கப்பட்டதாம்.
தமிழில் சூரி நடித்த 40 நிமிட காட்சிகள், தெலுங்கில் சத்யம் ராஜேஷ் என்கிற காமெடி நடிகரை வைத்து படமாக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்ல, தமிழில் நயன்தாரா, சிம்பு இருவரும் இணைந்து நடித்த சிம்பு எழுதிய பாடல் ஒன்றை, டி.ராஜேந்தர் சுந்தர தெலுங்கில் எழுதியுள்ளார். ‘முன்ன மன்மதா.. நின்ன வல்லபா.. நேனு சரஸுடு” என சிம்புவின் ஹிட் படங்களின் பெயர்கள் எல்லாம் அந்தப்பாட்டில் இடம்பெறுகின்றனவாம். இந்தப்படம் ஆந்திரா, தெலுங்கானாவில் மட்டுமல்லாமல் கர்நாடகாவிலும், தமிழகத்தில் உள்ள சில முக்கிய தியேட்டர்களிலும் தெலுங்கிலேயே ரிலீஸாகிறது.
தமிழ்நாட்டில் எடுக்கப்பட்ட தெலுங்கு படமான இதற்கு மத்திய அரசின் ஜி.எஸ்.டி வரி மட்டுமே விதிக்கப்பட்டுள்ளது. ஆந்திரா, தெலுங்கானா என இரண்டு மாநில அரசுகளும் ஜி.எஸ்.டி வரியில் இருந்து விளக்கு அளித்துள்ளன.
இயக்குநர் பொன் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கொம்பு சீவி' திரைப்படத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் விஜயகாந்த், தார்னிகா, காளி வெங்கட் , முனீஸ்காந்த், ஜார்ஜ் மரியான், சுஜித் சங்கர், கல்கி ராஜா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்...
'இறுதிப் பக்கம்' திரைப்படத்தைத் தயாரித்த இன்சாம்னியாக்ஸ் ட்ரீம் கிரியேஷன்ஸ் எல்...
தமிழக அரசு மற்றும் NFDC ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் (ICAF) நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது...