Latest News :

ரம்யா நம்பீசனுடன் ஜோடி சேரும் ரியோ ராஜ்!
Tuesday October-15 2019

டிவி-யில் இருந்து வெள்ளித்திரைக்கு எண்ட்ரியாகியிருக்கும் ரியோ ராஜ், தனது இரண்டாவது படத்தில் ரம்யா நம்பீசனுடன் ஜோடி சேருகிறார்.

 

பாசிடிவ் பிரிண்ட் ஸ்டுடியோஸ் சார்பில் ராஜேஷ் குமார் மற்றும் எல்.சிந்தன் இருவரும் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை பத்ரி வெங்கடேஷ் இயக்குகிறார். ரம்யா நம்பீசன் நடிக்கவிருக்கும் இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். 

 

இந்தப் படம் குறித்து தயாரிப்பாளர் ராஜேஷ் குமார் கூறுகையில், “பாசிடிவ் பிரிண்ட் ஸ்டுடியோஸ் என்ற எங்கள் நிறுவனம் மிகச் சிறந்த பொழுதுபோக்கு அம்சங்களைக் கொண்ட திரைப்படங்களைத் தரவேண்டும் என்ற குறிக்கோளுடன் துவக்கப்பட்டதாகும். எங்களுடைய நோக்கத்தை பூர்த்தி செய்யும் வகையில் ஏ.சி.கருணாமூர்த்தி எழுதிய கதையும், அதற்கு பத்ரி வெங்கடேஷ் கொடுத்திருக்கும் திரைவடிவமும் அமைந்து விட்டது. மேலும் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு படத்தில் அறிமுகமானபோதே அனைத்து தரப்பு ரசிகர்களின் அபிமானத்தையும் பெற்ற ரியோ ராஜ், இந்தப் படத்தில் இருப்பது இன்னும் சிறப்பானது. இப்படம் முழுக்க முழுக்க பொழுது போக்குப் படம் என்றாலும், துவக்கம் முதல் இறுதிவரை  ரசிகர்களை கட்டிப்போட்டு இருக்கையில் அமர வைப்பத்திருப்பது போன்ற காட்சிகள் இருக்கும்.” என்றார்.

 

தயாரிப்பாளர்களில் ஒருவரான எல்.சிந்தன் கூறுகையில், “அக்டோபர் 17ஆம் தேதியிலிருந்து படப்படிப்பை துவக்கி முழு வேகத்தில் தொடர்ந்து நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம். கதாநாயகி வேடம் மிகவும் வலுவானது என்பதால், பல நடிகைகளைப் பரிசீலித்தோம். இறுதியில் ரம்யா நம்பீசன்தான் அந்த வேடத்துக்குப் பொருத்தமாக இருப்பதுடன், அந்தப் பாத்திரப்படைப்பை நியாயப்படுத்தும் விதத்தில் நடிப்பார் என்ற முடிவுக்கு வந்தோம். இவை எல்லாவற்றுக்கும் மேலாக யுவன் சங்கர் ராஜா எங்கள் படத்துக்கு இசையமைப்பது படத்தை அடுத்த கட்டத்துக்கு உயர்த்தி விட்டது. படத்தில் நடிக்கும் இதர நடிகர் நடிகையர் குறித்து அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும்.” என்றார்.

 

பி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு சாம் ஆர்.டி.எக்ஸ். படத்தொகுப்பு செய்கிறார். ஆர்.கே.வசனம் எழுத, ஸ்டன்னர் சாம் சண்டைக் காட்சிகளை அமைக்கிறார். கலை இயக்குநராக சரவணன் பொறுப்பேற்க, மக்கள் தொடர்பு பணிகளை சுரேஷ் சந்திரா-ரேகா டி.ஒன் கவனிக்கின்றனர்.

Related News

5751

’எஸ்.கே.எஸ்’ பட முதல் பார்வை போஸ்டர் வெளியீடு!
Monday March-16 2026

அறிமுக நடிகைகள் தேவல்ல கவிதா, அன்னா ஆஷா, கீர்த்தி, சங்கீதா ஆகியோர் கதையின் நாயகிகளாக நடித்திருக்கும் ’எஸ் கே எஸ்’ (SKS) திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது...

இந்தியா முழுமைக்கும் ஜோய் ஆலுக்காஸின் சேவை விரிவடையும் - நடிகர் பிரஷாந்த் நம்பிக்கை
Monday March-16 2026

தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு, புதிதாகக் கட்டப்பட்ட 50 ஜோய் இல்லங்களை' (Joy Homes) ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை வழங்கியுள்ளது...

தமிழ் சினிமாவில் நல்ல மாற்றங்கள் வரும் - ஜி.கே.எம்.தமிழ்குமரன் உறுதி
Monday March-16 2026

ஏசிஎம் சினிமாஸ் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரிக்க,   திரைப்பட கல்லூரி மாணவரான ஜெகன் ராயன் எழுதி இயக்கியுள்ள படம் ’ரூம் பாய்’...

Recent Gallery