விஜயின் ‘பிகில்’ தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 25 ஆம் தேதி வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம், தமிழகத்தில் தணிக்கை செய்ய தாமதம் ஆகும் என்பதால், மும்பையில் தணிக்கை செய்வதற்கான பணியில் தயாரிப்பு தரப்பு ஈடுபட்டுள்ளது.
இன்னும் ஒரு வாரத்திற்குள் தணிக்கை செய்யப்பட்டுவிடும் என்ற நம்பிக்கையில் இருக்கும் தயாரிப்பு தரப்பு, அதன் பிறகே ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளார்கள்.
இந்த நிலையில், பிகில் படத்திற்காக நள்ளிரவு 1 ஒரு மணிக்கு சிறப்பு காட்சிகள் போட வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளார்களாம். தயாரிப்பாளர் தரப்பும் அதே முடிவில் தான் இருக்கிறார்களாம். காரணம், படத்தின் பட்ஜெட் மிகப்பெரியதாக இருப்பதால், போட்ட பணத்தை திரும்ப பெற வேண்டுமானால், இதுபோன்ற அதிகாலை காட்சிகள் போட்டால் தான் முடியும், என்று நினைக்கும் தயாரிப்பாளர்கள் தமிழகம் முழுவதும் சிறப்பு காட்சிகள் போட வேண்டும், என்று திட்டமிட்டிருக்கிறார்களாம்.
ஆனால், அரசு தரப்பில் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி கொடுக்க கூடாது, என்று முடிவு எடுத்திருக்கிறார்களாம். ‘பிகில்’ படம் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டவுடன், அரசு தரப்பில் இருந்து திரைப்படங்களுக்கான சிறப்பு காட்சிகளுக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டதற்கான அறிக்கை வெளியிட வாய்ப்பு இருப்பதாக கோடம்பாக்கத்தில் பேச்சு அடிபடுகிறது. இந்த தகவலால் பிகில் தயாரிப்பாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
அறிமுக நடிகைகள் தேவல்ல கவிதா, அன்னா ஆஷா, கீர்த்தி, சங்கீதா ஆகியோர் கதையின் நாயகிகளாக நடித்திருக்கும் ’எஸ் கே எஸ்’ (SKS) திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது...
தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு, புதிதாகக் கட்டப்பட்ட 50 ஜோய் இல்லங்களை' (Joy Homes) ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை வழங்கியுள்ளது...
ஏசிஎம் சினிமாஸ் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரிக்க, திரைப்பட கல்லூரி மாணவரான ஜெகன் ராயன் எழுதி இயக்கியுள்ள படம் ’ரூம் பாய்’...