விஜய் தொலைக்காட்சியின் முக்கியமான விஜேவாக வலம் வரும் டிடி, சினிமா ஏரியாவிலும் பிரபலம். இவருக்கு என்று தனிப்பட்ட ரசிகர்கள் வட்டமே இருக்கிறது. இவர் தொகுத்து வழங்கிய அனைத்து நிகழ்ச்சிகளும் ஹிட் என்பதால் இவரை விஜய் டிவி விடாமல் பிடித்து வைத்திருக்கிறது.
இதற்கிடையே, கடந்த 2014 ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் நண்பர் ஸ்ரீகாந்தை திருமணம் செய்துக்கொண்ட டிடி, சில மாதங்களிலேயே அவரை பிரிந்து வாழ, ஸ்ரீகாந்தும் டிடி-யை விவாகரத்து செய்தார். டிடியின் இந்த திருமண முறிவு அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியளித்தாலும், அதற்கான காரணத்தை டிடி இதுவரை சொன்னதில்லை.
இந்த நிலையில், டிடி-யின் முன்னாள் கணவர் ஸ்ரீகாந்த், டிடியை விவாகரத்து செய்ததற்கான காரணத்தை பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.
அதாவது திருமணத்திற்குப் பிறகு எந்த நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்க கூடாது என்று கூறிய ஸ்ரீகாந்த், சினிமாவிலும் நடிக்க கூடாது என்று டிடி-யிடம் கூறினாராம். முதலில் அனைத்துக்கும் ஓகே சொன்ன டிடி திருமணத்திற்குப் பிறகு தொடர்ந்து தனது வேலையில் கவனம் செலுத்தியதோடு, அதிகமான ஆண் நண்பர்களுடனும் பழகி வந்தாராம்.
இதன் காரணமாகவே டிடி-க்கும், ஸ்ரீகாந்துக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அவர்கள் பிரிவதற்கும் காரணமாக அமைந்துவிட்டதாக, அவர் தெரிவித்துள்ளார்.
’கே.ஜி.எஃப்’, ‘காந்தாரா’, ‘சலார்’ போன்ற மாபெரும் வெற்றி படங்கள் மூலம் இந்திய திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாகவும், சாதனை படைப்புகளை தயாரிக்கும் நிறுவனமாகவும் பார்க்கப்படும் ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் மற்றொரு பிரமாண்டமான படைப்பாக உருவாகியுள்ளது ‘காந்தாரா - சாப்டர் 1’...
நடிகர் வெற்றி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'சென்னை ஃபைல்ஸ் - முதல் பக்கம்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது...
இளம் இசையமைப்பாளர் தரண் குமார் இசையில், பிரபல ராப் இசை கலைஞரான வாஹீசன் ராசய்யா எழுத்தில், சரிகமா ஒரிஜினல்ஸ் வெளியீடாக வெளியாகியுள்ள 'ச்சீ ப்பா தூ...