மலையாள சினிமாவின் முன்னணி ஹீரோயினாக இருந்த மஞ்சு வாரியர், திருமணத்திற்குப் பிறகு நடிப்பதை நிறுத்திவிட்டார். இதற்கிடையே அவர் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று மீண்டும் நடிக்க தொடங்கியிருப்பவர் தொடர்ந்து வெற்றிப் படங்களைக் கொடுத்து வருவதால், ஏராளமான மலையாளப் படங்களில் நடித்து வருகிறார்.
‘அசுரன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான மஞ்சு வாரியர், முதல் படத்திலேயே நடிப்பில் அசத்தியதோடு பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறார்.
இந்த நிலையில், ரஜினிகாந்தின் 198 வது படத்தில் முக்கியமான வேடம் ஒன்றில் நடிக்க மஞ்சு வாரியர் ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க ஜோதிகாவிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியான நிலையில், தற்போது மஞ்சு வாரியரும் படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.
சிறுத்தை சிவா இயக்கும் இப்படத்தின் நடிகர், நடிகைகள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
’கே.ஜி.எஃப்’, ‘காந்தாரா’, ‘சலார்’ போன்ற மாபெரும் வெற்றி படங்கள் மூலம் இந்திய திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாகவும், சாதனை படைப்புகளை தயாரிக்கும் நிறுவனமாகவும் பார்க்கப்படும் ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் மற்றொரு பிரமாண்டமான படைப்பாக உருவாகியுள்ளது ‘காந்தாரா - சாப்டர் 1’...
நடிகர் வெற்றி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'சென்னை ஃபைல்ஸ் - முதல் பக்கம்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது...
இளம் இசையமைப்பாளர் தரண் குமார் இசையில், பிரபல ராப் இசை கலைஞரான வாஹீசன் ராசய்யா எழுத்தில், சரிகமா ஒரிஜினல்ஸ் வெளியீடாக வெளியாகியுள்ள 'ச்சீ ப்பா தூ...