’நேர்கொண்ட பார்வை’ படத்தை தொடர்ந்து அஜித் நடிக்கும் புது படத்தை ‘தல 60’ என்று அழைக்கின்றனர். இப்படத்தின் துவக்க விழா இன்று நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதுவரை அதற்கான எந்த ஒரு தகவலும் படக்குழுவிடம் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.
இதற்கிடையே, இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைப்பாதாக நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், படத்திற்கு ‘வலிமை’ என்று தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாகவும், இந்த தலைப்பை அஜித் தான் தேர்வு செய்ததாகவும் கூறப்படுவதோடு, படத்தில் ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
‘நடிகையர் திலகம்’ மூலம் தேசிய விருது பெற்றவர், தற்போது இந்தி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தயாரிக்கும் போனி கபூர் தான் அஜித்தின் 60 வது படத்தையும் தயாரிப்பதால், கீர்த்தி சுரேஷையே அஜித் படத்திற்கும் ஹீரோயினாக்கியுள்ளார் என்று கூறப்படுகிறது.

விஜய்க்கு ஜோடியாக நடித்த கீர்த்தி சுரேஷ், விஜயின் தீவிர ரசிகர் ஆவார். இவர் நடிக்கு முன்பாகவே படப்பிடிப்பு தளத்திற்கு சென்று விஜயை பார்க்க முயன்றதாக பல பேட்டிகளில் கூறியிருக்கிறார். இப்படி விஜயின் ரசிகையாகவும், அவரது ஹீரோயினாகவும் இருக்கும் கீர்த்தி சுரேஷ், தற்போது அஜித்துக்கு ஜோடியாகப் போகிறார்.
அறிமுக நடிகைகள் தேவல்ல கவிதா, அன்னா ஆஷா, கீர்த்தி, சங்கீதா ஆகியோர் கதையின் நாயகிகளாக நடித்திருக்கும் ’எஸ் கே எஸ்’ (SKS) திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது...
தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு, புதிதாகக் கட்டப்பட்ட 50 ஜோய் இல்லங்களை' (Joy Homes) ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை வழங்கியுள்ளது...
ஏசிஎம் சினிமாஸ் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரிக்க, திரைப்பட கல்லூரி மாணவரான ஜெகன் ராயன் எழுதி இயக்கியுள்ள படம் ’ரூம் பாய்’...