கார்த்தி நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு வரும் அக்டோபர் 25 ஆம் தேதி வெளியாகும் ‘கைதி’ மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. காரணம், படத்தின் கண்டெண்ட் மற்றும் உருவான விதம். முழுக்க முழுக்க இரவில் நடக்கும் கதையம்சம் கொண்ட இப்படம் போல தமிழ் சினிமாவில் இதுவரை வந்ததில்லை, என்றே கூறப்படுகிறது.
தொழில்நுட்ப ரீதியாக மிரட்டலாக படம் வந்திருப்பதாகவும், அதே சமயம் ரசிகர்கள் கொண்டாடும் வகையில் கமர்ஷியலாகவும் படம் இருப்பதாக கோடம்பாக்கத்தில் பேசப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தின் பல முக்கிய திரையரங்கங்களும் கைதி படத்தை ரிலீஸ் செய்வதில் ஆர்வம் காட்டியிருப்பதால், படம் நிச்சயம் ரசிகர்களுக்கு சர்பிரைஸாக இருக்கும் என்பது உறுதியாகியுள்ளது.
இந்த நிலையில், ‘கைதி’ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நரேன், படம் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறுகையில், “நான் போலீஸாக சில படங்களில் நடித்திருக்கிறேன், ஆனால், இந்த படத்தில் வரும் போலீஸ் வேடம் வித்தியாசமானது. இந்த படம் எடுக்கும்போதே, படம் சிறப்பாக வரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. இது ஒரு சில படங்களுக்கு தான் வரும். அதேபோல் படமும் மிரட்டலாக வந்துள்ளது.

கார்த்தி தனக்கு எது தேவை என்பதில் தெளிவாக இருகிறார். அவரது பட தேர்வுகளும் அதேபோல் தான் இருக்கிறது. படம் தொடங்கியதில் இருந்து முடியும் வரை விறுவிறுப்பாகவே நகரும். அதேபோல், ஆக்ஷன், எமோஷன் என இரண்டுமே படத்தில் நிறைந்திருந்தாலும், அதை இயக்குநர் கமர்ஷியலாகவும் கொடுத்திருக்கிறார். இது கமர்ஷியல் படம் தான், ஆனால் வித்தியாசமான படம். நிச்சயம் ரசிகர்கள் ‘கைதி’ யை கொண்டாடுவார்கள்.” என்றார்.
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட ’அமரன்’ திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது...
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...