சினிமா, சின்னத்திரை மட்டும் இன்றி அரசியலில் பிஸியாக இருக்கும் குஷ்பு, அதே சமயம் தனது குடும்பத்தின் மீதும் மிகுந்த அக்கறையுடன் இருக்கிறார். என்னதான் பிஸியாக நடித்தாலும், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளை தனது குடும்பத்திற்காக ஒதுக்கியிருப்பவர், அந்த நாட்களில் கோடிகளை கொட்டினாலும், நடிக்க மறுத்துவிடுவார். அந்த அளவுக்கு அவர் தனது குடும்பத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்.
இந்த நிலையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலிதா அரசியல் வாழ்க்கையில் பெற்ற வெற்றியை, குடும்ப வாழ்க்கையில் பெறவில்லையே ஏன்? என்று நடிகை குஷ்புவிடம் ரசிகர்கர் ஒருவர் கேட்டதற்கு, “பேராசை. தன்ன்னைவிட மற்றவர்களை அதிகமாக நம்பியது. அதனுடன், அனைத்திலும் தான் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம். பழிவாங்கும் எண்ணம், இவற்றால் அதான் அவர் குடும்ப வாழ்க்கையில் தோல்வியடைந்திருக்க வேண்டும்” என்று பதில் அளித்துள்ளார்.
வார இதழ் ஒன்றில் வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்திருக்கும் குஷ்புவின் ஜெயலலிதா பற்றிய இந்த பதிலால், அதிமுக பிரமுகர்கள் அவர் மீது செம கடுப்பில் இருப்பதாகவும் தகவல் கசிகிறது.
எஸ்.வி.எம் ஸ்டுடியோஸ் சார்பில் ராதிகா ஸ்ரீனிவாஸ் தயாரிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ள படம் ‘த்ரிகண்டா’...
தமிழ்நாட்டு அரசியல் மற்றும் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஆளுமையாக திகழ்ந்த மறைந்த முன்னாள் அமைச்சர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆர்...
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான 2026 முதல் 2029ம் ஆண்டுக்கான நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான சங்க தேர்தல் வரும் பிப்ரவரி 22, 2026 அன்று நடைபெற உள்ளது...