இமயமமலையில் இருந்த் திரும்பியுள்ள ரஜினிகாந்த் விரைவில் ‘பேட்ட’ படத்தின் டப்பிங்கில் ஈடுபட உள்ளார். அதன் பிறகு சில நாட்கள் ஓய்வு எடுத்துவிட்டு தனது 168 வது படத்தில் ஈடுபட உள்ளார்.
சிவா இயக்கும் இப்படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக ஜோதிகா நடிக்க இருப்பதாகவும், தங்கை வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதேபோல், டி.இமான் இசையமைக்க இருப்பதாகவும் ஒரு தகவல் உலா வருகிறது.
இந்த நிலையில், இசையமைப்பாளர் விவகாரத்தில் ரஜினிகாந்த் சிபாரிசை இயக்குநர் சிவா ஏற்காமல் நிராகரித்துவிட்டதாக கூறப்படுகிறது.
‘பேட்டா’ படத்திற்கு இசையமைத்த அனிருத், ஹிட் பாடல்களை கொடுத்ததால், ‘தர்பார்’ படத்திற்கும் அனிருத்தை ரஜினி சிபாரிசு செய்ய, முருகதாஸும் ஏற்றுக்கொண்டார். தற்போது ‘தலைவர் 168’ படத்திற்கும் அனிருத்தையே ரஜினிகாந்த் சிபாரி செய்தாராம். அவருடன் சன் பிக்சர்ஸ் நிறுவனமும் அனிருத் பெயரை தான் இசையமைப்பாளராக கூறினார்களாம்.
ஆனால், ரஜினியின் சிபாரிசை நிராகரித்த இயக்குநர் சிவா, அனிருத்தை தவிர வேறு யாரை சிபாரிசு செய்தாலும் ஏற்றுக்கொள்கிறேன், அவர் மட்டும் வேண்டாம், என்று கூறிவிட்டாராம். காரணம், வேதாளம் மற்றும் விவேகம் படங்களுக்கு இசையமைத்த அனிருத், அப்பட வேலைகளில் போது சிவாவை வெச்சு செஞ்சிட்டாராம். சிவா எப்போது அவரை தொடர்புகொண்டாலும், தொடர்பு எல்லைக்கு வெளியேர் இருப்பாராம். அவரேக்கு தோன்றினால் தான் போன் செய்து, என்ன விஷயம் என்று கேட்பாராம். இதனால், அப்போதே கடுப்பான சிவா, இனி அனிருத்துடன் இணைந்து பணியாற்றக் கூடாது என்று முடிவு எடுத்துவிட்டாராம்.
இயக்குநர் சிவாவின் நிராகரிப்பை தொடர்ந்து ‘தலைவர் 168’ படத்திற்கு டி.இமான் இசையமைக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் கோயாஸ் எனும் வெள்ளி நகை விற்பனை மையம் துவக்க விழா நடைபெற்றது அதில் பிரபல நடிகையும் வாடகைக்குமான ஆண்ட்ரியா பங்கேற்று நகைக்கடையை திறந்து வைத்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஆபரணங்களை பார்வையிட்டார்...
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...