கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான ‘பரூத்திவீரன்’ மூலம் ஹீரோவாக அறிமுகமான கார்த்தி, தனது முதல் படத்திலேயே மிகப்பெரிய ஓபனிங்கை கொடுத்ததோடு, பிளாக் பஸ்டர் வெற்றியையும் கொடுத்தார். அறிமுகப்படத்திலேயே இவ்வளவு பெரிய வெற்றியை எந்த நடிகரும் கொடுத்ததில்லை, என்று ஒட்டு மொத்த கோலிவுட்டே பேசும் அளவுக்கு கார்த்தியின் அறிமுகம் அமர்க்களமாக இருந்தது.
பிறகு தொடர்ந்து வெற்றிப் படங்களைக் கொடுத்த கார்த்தி, கிராமம், நகரம், ஆக்ஷன், காதல் என்று அனைத்துவிதமான படங்களுக்கும் பொருந்தும் நடிகராக உருவெடுத்தவர், பக்கத்து வீட்டு பையன் என்ற இமேஜோடு தனது ஒவ்வொரு படங்கள் மூலமாகவும் அனைத்து தரப்பினரையும் கவர்ந்து வருகிறார்.
தற்போது கார்த்தியின் நடிப்பில் உருவாகியுள்ள ‘கைதி’ தீபாவளியை முன்னிட்டு வரும் அக்டோபர் 25 ஆம் தேதி வெளியாகிறது. அன்றைய தினம் மற்றொரு முன்னணி நடிகரின் படம் வெளியானாலும், வித்தியாசமான கதைக்களத்தோடு மட்டும் அல்லாமல் ரசிகர்கள் கொண்டாடக்கூடிய அனைத்து அம்சங்களும் நிறைந்த ஆக்ஷன் படமாக ‘கைதி’ உருவாகியுள்ளதால், இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியிலும், திரையரங்க உரிமையாளர்கள் மத்தியிலும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.
இந்த நிலையில், சமீபத்தில் ரசிகர்களை சந்தித்து பேசிய கார்த்தி, தனது ‘கைதி’ படம் பற்றி பேசும் போது, மீண்டும் ஒரு ‘பரூத்திவீரன்’ போல கைதி படம் இருக்கும். கதாபாத்திரமக கைதி படத்தின் கதாபாத்திரம் எனக்கு பிடித்திருந்தது. அதனால் தான் இந்த படத்தில் நடித்தே. இது வித்தியாசமான படம் என்றாலும் ரசிகர்களுக்கான படமாகவும் இருக்கும், என்று உற்சாகமாக கூறியிருக்கிறார்.
ஏற்கனவே, படத்தில் நடித்தவர்கள் மட்டும் இன்றி விநியோகஸ்தர்களும் கைதி படம் மிகச்சிறப்பாக வந்திருப்பதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட ’அமரன்’ திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது...
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...