இயக்குநர் விக்னேஷ் சிவன் என்பதை விட, நயன்தாராவின் தற்போதைய காதலர் என்றால், சட்டென்று அனைவரது நினைவுக்கும் வந்துவிடுவார். காரணம், நயன்தாராவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டே தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறார் விக்னேஷ்.
இப்போ சேதி என்னவென்றால், விக்கிக்கும், நயனுக்கும் ‘நானும் ரவுடி தான்’ படத்தின் மூலம் தான் காதல் பத்திக்கிச்சி. ஆனால், இது விக்னேஷ் சிவனின் முதல் படம் அல்ல இரண்டாவது படம். ஆம், சிம்பு நடித்த ‘போடா போடி’ என்ற தோல்விப் படம் தான் விக்கியின் முதல் படம். இப்படி முதல் படமே தோல்வியில் அமைந்தாலும், அவர் மீது நம்பிக்கை வைத்து ‘நானும் ரவுடி தான்’ படத்தை நடிகர் தனுஷ் தயாரித்தார். அப்படத்தின் மூலம் விக்கிக்கு வெற்றியும் கிடைத்தது, பம்பர் பரிசாக நயனும் கிடைத்தார்.
விஷயம் இப்படி இருக்க, சமீபத்தில் நானும் ரவுடி தான் படத்தின் நான்காம் வருடத்தை கொண்டாடிய விக்னேஷ் சிவன், அப்படத்தில் நடித்த விஜய் சேதுபதி, நயன், ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட நடிகர் நடிகைகள் மட்டும் இன்றி, படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் படத்தை வெளியிட்ட லைகா நிறுவனம் என அனைவருக்கும் நன்றி தெரிவிக்க, படம் உருவாக மூளக்காரணமாக இருந்த தயாரிப்பாளர் தனுஷ் பெயரை எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை.
இதை கவனித்த தனுஷ் ரசிகர்கள், விக்னேஷ் சிவனின் பதிவுக்கு காட்டமாக கமெண்ட் போட்டதோடு, ”விக்னேஷ் சிவன் நன்றி மறந்தவர்” என்றும் வசைப்பாடி வருகிறார்கள்.
Zinema Media and Entertainment Ltd. சார்பில் தினேஷ் ராஜ் வழங்க, Creative Entertainers & Distributors நிறுவனத்தின் ஜி...
மறைந்த பிரபல நடிகர் டாக்டர்...
அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்க அவருடன் வாகை சந்திரசேகர், சுனில் கிரிபலானி, செல் முருகன், திருப்தி ரவீந்திரா மற்றும் பலர் நடித்துள்ளனர்...