கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 கடந்த இரண்டு சீசன்களை காட்டிலும் மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்றது. இதற்கு முக்கிய காரணமாக சில காதல் விவகாரங்களும், சில பெண் போட்டியாளர்களின் சர்ச்சையான செயல்களும் இருந்தன.
அந்த வகையில், பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக பங்கேற்ற மாடலும், நடிகையுமான மீரா மிதுனின் மீது மோசடி புகார், கொலை மிரட்டல் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, பிக் பாஸ் வீட்டில் போலீஸ் நுழைந்தது. மேலும், சக போட்டியாளரான சேரன், தன்னை தவறாக தொட்டார் என்று மீரா மிதுன் புகார் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் மூலம் ரசிகரக்ள் வாக்குகள் அடிப்படையில் மீரா மிதுன் வெளியேற்றப்பட்டார்.
பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய மீரா மிதுன், தொடர்ந்து சமூக வலைதளங்களில் பரபரப்பாக எதையாவது பேசி வருகிறார். அந்த வகையில், சினிமா பிரபலங்கள் குறித்து பல ரகசியங்களை வெளியிடப்போவதாக வீடியோ ஒன்றின் மூலம் மிரட்டல் விடுத்தார்.
இந்த நிலையில், மீரா மிதுன் இரண்டாவது திருமணம் செய்துகொள்ளப் போவதாக அறிவித்துள்ளார். ஏற்கனவே தனக்கு திருமணமானதை மறைத்து மிஸ் சவுத் இந்தியாவில் வெற்றி பெற்றதால் அவரது பட்டம் பறிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தற்போது மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாக தெரிவித்திருக்கும் மீரா மிதுன், திருமணம் ஒன்றே இதற்கு சரியான தீர்வாக இருக்கும். அதனால், தான் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருப்பதாகவும், தனது நீண்ட நாள் நண்பரை திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும், சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...