தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘அசுரன்’ மிகப்பெரிய வெற்றி பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தில் தனுஷ் நடிப்பு எப்படி பாராட்டு பெற்றதோ அதுபோல், அவருக்கு மனைவியாக நடித்த மஞ்சு வாரியரின் நடிப்பும் பாராட்டப்பட்டது.
மலையால சினிமாவில் முன்னணின் நடிகையாக இருக்கும் மஞ்சு வாரியர் அசுரன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகியுள்ள நிலையில், அவருக்கு ஏராளமான தமிழ்ப் பட வாய்ப்புகள் வருவதாகவும், ரஜினியின் 168 வது படத்திலும் அவர் ஒப்பந்தமாகியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், மஞ்சு வாரியர் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கேரளா டி.ஜி.பி-யிடம் புகார் அளித்துள்ளார். அதில் பிரபல தயாரிப்பாளர் வி.ஏ.ஸ்ரீகுமார் மேனன், தான் கையெழுத்து போட்ட பிளாங்க் செக்குகளை வைத்து மோசடி செய்திருப்பதாகவும், அது குறித்து கேட்டதால் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும், தெரிவித்துள்ளார்.
புகாருடன் தயாரிப்பாளர் மோசடி செய்ததற்கான டிஜிட்டல் ஆதாரங்களையும் மஞ்சு வாரியர் ஒப்படைத்திருக்கிறாராம்.
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட ’அமரன்’ திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது...
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...