பெரும்பாளான காட்சிகள் பாத்ரூமுக்குள்ளேயே படமாக்கப்பட்ட ‘ரூம்’ திரைப்படம் முழுக்க முழுக்க திரில்லர் படமாக உருவாகியுள்ளது.
சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் மற்றும் அஸ்வின் கே.வின் மார்ச் 30 நிறுவனம் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தை ‘அம்முவாகிய நான்’ மற்றும் ‘நேற்று இன்று’ ஆகிய படங்களை இயக்கிய பத்மாமகன் இயக்கியிருக்கிறார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் உருவாகும் இப்படத்தில் அபிஷேக் வர்மா ஹீரோவாக நடிக்கிறார். ஹீரோயினாக மனோசித்ரா நடிக்கிறார்.
இப்படத்தின் சிறப்பம்சமே, படத்தின் பெரும்பகுதி பாத்ரூமுக்குள்ளேயே நடப்பது போல திரைக்கதை அமைக்கப்பட்டிருப்பது தான். மேலும், தமிழ்சினிமாவில் இதுவரை மேற்கொள்ளப்படாத ஒரு முயற்சியாக திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படம் ரசிகர்களுக்கு ஆச்சர்யமான அனுபவத்தை வழங்கும் என்பது உறுதி.
பிரபல ஒளிப்பதிவாளர் எம்.எஸ்.பிரபு ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு, தெலுங்கில் சுமார் 300 படன்களுக்கு இசையமைத்த வினோத் யஜமான்யா இசையமைத்துள்ளார்.
’குற்றம் கடிதல்’, ’ஹவுஸ் ஓனர்’ என இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முக்கியமான படங்களுக்கு படத்தொகுப்பு செய்த சி.எஸ்.பிரேம் ‘ரூம்’ படத்தை எடிட் செய்கிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட ’அமரன்’ திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது...
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...