ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் ‘பொட்டு’.
இந்த படத்தில் பரத் நாயகனாக நடிக்கிறார். நாயகிகளாக நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் தம்பி ராமய்யா, பரணி, நான்கடவுள் ராஜேந்திரன், ஊர்வசி, நிகேஷ்ராம், ஷாயா ஜிஷிண்டே, மன்சூரலிகான், ஆர்யன், சாமிநாதன், பாவாலட்சுமணன்,பயில்வான் ரங்கநாதன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
செந்தில் வசனம் எழுதியுள்ள இப்படத்திற்கு இனியன் ஹரீஷ் ஒளிப்பதிவு செய்ய, அம்ரீஷ் இசையமைத்துள்ளார். விவேகா, கருணாகரன், சொற்கோ ஆகியோர் பாடல்கள் எழுத, சூப்பர் சுப்பராயண் ஆக்ஷன் காட்சிகளை வடிவமைத்துள்ளார். எலிசா எடிட்டிங் செய்ய, நித்யானந் கலை துறையை கவனித்துள்லார். ராபர்ட் நடனம் அமைத்துள்ளார். தயாரிப்பு மேற்பார்வையை ஜி.சங்கர் கவனிக்கிறார்.
கதை, திரைக்கதை, எழுதி வடிவுடையான் இயக்கும் இப்படம் சமீபத்தில் சென்சார் அதிகாரிகளுக்கு திரையிடப்பட்டது. படத்தை பார்த்த அதிகாரிகள் படத்திற்கு யு ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து கே...
’செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ஏ...
வி.ஒய்.ஓ.எம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சதீஷ் மற்றும் விஜயா சதீஷ் தயாரிப்பில், டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மனிதன் தெய்வமாகலாம்’...