தீபாவளியை முன்னிட்டு வரும் நாளை மறுநாள் (அக்டோபர் 25) வெளியாக உள்ள ‘கைதி’ திரைப்படம் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் படத்துடன் இப்படம் வெளியானாலும், இப்படத்திற்கு என்று தனி ரசிகர்களே இருக்கிறார்கள். காரணம், இப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவின் முந்தைய படங்களும், இயக்குநர் லோகேஷ் கனகராஜின் முதல் படமான ‘மாநகரம்’ மற்றும் கார்த்தியின் தொடர் வெற்றி தான்.
‘மாநகரம்’ படம் மூலம் திறமையான இயக்குநர் என்று லோகேஷ் கனகராஜ் பெயர் எடுத்ததை போல, தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு ‘ஜோக்கர்’, ‘அருவி’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ போன்ற தரமானப் படங்களை தொடர்ந்து கொடுத்து வருவதால் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிக்கும் படம் என்றாலே, கமர்ஷியலாக இருப்பதோடு, சினிமா ரசிகர்களை முழுமையாக திருப்திப்படுத்தும் வித்தியாசமான சினிமாவாக இருக்கும், என்ற நம்பிக்கை ரசிகர்களிடம் இருக்கிறது. அதனால் தான், ‘கைதி’ படத்தின் மீதும் எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், சுமார் 250 க்கும் மேற்பட்ட திரையரங்கங்கள் ‘கைதி’ படத்திற்கு கிடைத்திருக்கிறது. இன்னும் திரையரங்கங்கள் அதிகரிக்குமா? என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவிடம் கேட்டதற்கு, படம் வெளியான பிறகு தான் அது தெரியும். ஆனால், 250 திரையரங்கம் என்பதே எங்களுக்கு போதுமானது. அந்த திரையரங்களுக்கான ரசிகர்களே எனது படத்தின் லாபத்தை கொடுத்துவிடும். 50 கோடி ரூபாய் வியாபாரம் செய்யும் படங்களால், சில கோடி நஷ்ட்டங்களும் ஏற்படுகிறது. 10 கோடி ரூபாய் வசூலிக்கும் படங்கள் 4 கோடி ரூபாய் வரை லாபம் கொடுக்கிறது. அதனால், திரையரங்கங்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் அந்த படம் பெரிய லாபத்தை கொடுத்துவிடும் என்று சொல்ல முடியாது.” என்றார்.
மேலும், படத்தில் ஹீரோயின் இல்லை, பாட்டு இல்லை, என்று சொல்கிறார்கள், தீபாவளிக்கு இப்படி ஒரு படத்தை ரசிகர்கள் விரும்புவார்களா? என்ற கேள்விக்கு, “பாட்டு, ஹீரோயின் இருந்தால் தான் அது படமா?, நல்ல கதை இருந்தால் போதும். மக்கள் கொண்டாடும் எத்தனையோ உலக சினிமாக்கள் என்ன பாட்டு, ஹீரோயினோடு தான் வருகிறதா என்ன, அதுபோல தான் ‘கைதி’ படமும். நல்ல கதையம்சமும், சினிமா ரசிகர்களுக்கான வித்தியாசமான படமாக மட்டும் இல்லாமல், பேமிலி ஆடியன்ஸை திருப்திப்படுத்தும் செண்டிமெண்டான விஷயம் ஒன்று படம் முழுவதுமே இருக்கும். அதனால், படம் ஆக்ஷன் ஜானராக இருந்தாலும், அனைத்து தரப்பு ரசிகர்களையும் திருப்திப்படுத்தும்” என்று நம்பிக்கையோடு தெரிவித்தார்.
’கே.ஜி.எஃப்’, ‘காந்தாரா’, ‘சலார்’ போன்ற மாபெரும் வெற்றி படங்கள் மூலம் இந்திய திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாகவும், சாதனை படைப்புகளை தயாரிக்கும் நிறுவனமாகவும் பார்க்கப்படும் ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் மற்றொரு பிரமாண்டமான படைப்பாக உருவாகியுள்ளது ‘காந்தாரா - சாப்டர் 1’...
நடிகர் வெற்றி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'சென்னை ஃபைல்ஸ் - முதல் பக்கம்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது...
இளம் இசையமைப்பாளர் தரண் குமார் இசையில், பிரபல ராப் இசை கலைஞரான வாஹீசன் ராசய்யா எழுத்தில், சரிகமா ஒரிஜினல்ஸ் வெளியீடாக வெளியாகியுள்ள 'ச்சீ ப்பா தூ...