ரசிகர்களின் பேவரைட் டிவி நிகழ்ச்சியான பிக் பாஸின் மூன்றாவது சீசன் சமீபத்தில் நிறைவடைந்தது. இதில், போட்டியாளர்களாக பங்கேற்றவர்களில் தர்ஷன், கவின், முகேன் மற்றும் சாண்டி ஆகியோர் பாய்ஸ் குரூப் என்ற பெயரோடு ஒன்றாகவே இருக்கிறார்கள். நிகழ்ச்சி முடிந்த பிறகும் இவர்கள் எங்கு சென்றாலும் ஒன்றாகவே செல்கிறார்கள்.
தற்போது, வெற்றியாளர் முகேன் தாய்லாந்து பறந்துவிட்ட நிலையில், தர்ஷன், சாண்டி, கவின் ஆகியோர் பல நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்ட நிலையில், சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கவின் மட்டும் மிஸ்ஸிங். இது குறித்து சாண்டியிடம் கேட்டதற்கு கவின் வெளிநாட்டுக்கு சென்றிருப்பதாக தெரிவித்தார்.
மேலும், அவர் திரைப்படம் ஒன்றில் நடிப்பதாகவும், அதன் படப்பிடிப்புக்காக வெளிநாடு சென்றிருப்பதாகவும் சாண்டி கூறினார். ஆனால், உண்மை அது இல்லை என்று கூறப்படுகிறது.
பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது, இலங்கை பெண் லொஸ்லியாவும், சாண்டியும் காதலித்து வந்தார்கள். நிகழ்ச்சி முடிந்த பிறகு அவர் அவர் வேலையை பார்க்க தொடங்கிய நிலையில், லொஸ்லியா - கவின் காதலை பலர் கலாய்த்து வருகிறார்கள். ஆனால், தனது காதல் கலாய்க்கும் காதல் இல்லை, நிஜமான காதல் என்பதை கவின், இன்னும் சில நாட்களில் நிரூபிக்க போகிறாராம். அதாவது லொஸ்லியாவை பார்ப்பதற்காக தான் அவர் இலங்கை சென்றிருப்பதாக கூறப்படுகிறது.
பிக் பாஸுக்காக போட்ட நாடகம் அல்ல தனது காதல் என்பதை, லொஸ்லியாவின் பெற்றோரிடம் நேரடையாக சொல்வதற்காக தான் அவர் இலங்கை சென்றிருப்பதாக கூறப்படுகிறது.
இதில், எது உண்மை என்பது கவின் சொன்னதற்கு பிறகு தான் தெரியும்.
’கே.ஜி.எஃப்’, ‘காந்தாரா’, ‘சலார்’ போன்ற மாபெரும் வெற்றி படங்கள் மூலம் இந்திய திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாகவும், சாதனை படைப்புகளை தயாரிக்கும் நிறுவனமாகவும் பார்க்கப்படும் ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் மற்றொரு பிரமாண்டமான படைப்பாக உருவாகியுள்ளது ‘காந்தாரா - சாப்டர் 1’...
நடிகர் வெற்றி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'சென்னை ஃபைல்ஸ் - முதல் பக்கம்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது...
இளம் இசையமைப்பாளர் தரண் குமார் இசையில், பிரபல ராப் இசை கலைஞரான வாஹீசன் ராசய்யா எழுத்தில், சரிகமா ஒரிஜினல்ஸ் வெளியீடாக வெளியாகியுள்ள 'ச்சீ ப்பா தூ...