Latest News :

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் நடத்தும் முத்தமிழ் முகாம்!
Wednesday October-23 2019

திறந்தநிலை பல்கலைக்கழகம் இணைந்து தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், அரசு கலைப் பண்பாட்டுத் துறை  மற்றும் கலையியல் பள்ளி, நடத்தும் மூன்று நாள் முத்தமிழ் முகாம் சைதாப்பேட்டையில் உள்ள திறந்தநிலை பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற உள்ளது.

 

இயல் இசை நாடகம் என்ற பொருண்மையில் மூன்று நாட்களும் 100 மாணாக்கர்களுக்கு இலவசமாகப் பயிற்சிகள் கொடுக்கப்பட உள்ளது. இப்பயிலரங்கு 22.10.2019 முதல் 24.10.2019 வரை  நடைபெற உள்ளது. இதன் தொடக்க விழா 22.10.19 காலை 10 மணி அளவில் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பெற்றது.

 

இதில் மாண்பமை துணைவேந்தர் கோ.பார்த்தசாரதி அவர்கள் தலைமையேற்றுத் தொடங்கி வைக்க, விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் நாசர், இயல் இசை நாடக மன்றத்தின் தலைவரும், இசை அமைப்பாளருமான தேவா,  தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் நுண் கலைப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் முனைவர் பிரமிளா குருமூர்த்தி ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். இயல் இசை நாடக மன்றத்தின் உறுப்பினர் செயலாளர் வீ தங்கவேலு, கலைகள் பள்ளியின் தலைவர் சுதாகரன் ஆகியோர்  வாழ்த்துரை வழங்கினார்கள். 

 

மூன்று நாள் பயிலரங்கில் முனைவர் ப. நளினி , தமிழ்த்துறை தலைவர், எஸ். ஐ. வி. இ.டி கல்லூரி, கலைமாமணி  கீழம்பூர் திரு. எஸ். சங்கர சுப்பிரமணி, முனைவர் டி. சுரேஷ் சிவன், ஓதுவர் மூர்த்தி மற்றும் இசை ஆசிரியர்,  கலைமாமணி புரிசை சுப்பிரமணிய தம்பிரான் கூத்துப் பயிற்சி நடத்தவும், திரைப்பட மற்றும் சின்னத்திரை நடிகர் பூவிலங்கு மோகன் நடிப்புப் பயிற்சி அளிக்கவும், நாடகப் பயிற்சியாளர் கார்த்திகேயன், இசைப்பயிற்சியாளர் அரிமளம் பத்மநாபன் ஆகியோர் பயிற்சி அளிக்க உள்ளனர். இது மாணாக்கர்களுக்கு ஒரு புத்தாக்கப் பயிற்சியாகவும் அவர்களுக்கான கலை ஆர்வத்தை தூண்டும் பயிற்சியாகவும் அமைய உள்ளது. 

Related News

5783

’எஸ்.கே.எஸ்’ பட முதல் பார்வை போஸ்டர் வெளியீடு!
Monday March-16 2026

அறிமுக நடிகைகள் தேவல்ல கவிதா, அன்னா ஆஷா, கீர்த்தி, சங்கீதா ஆகியோர் கதையின் நாயகிகளாக நடித்திருக்கும் ’எஸ் கே எஸ்’ (SKS) திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது...

இந்தியா முழுமைக்கும் ஜோய் ஆலுக்காஸின் சேவை விரிவடையும் - நடிகர் பிரஷாந்த் நம்பிக்கை
Monday March-16 2026

தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு, புதிதாகக் கட்டப்பட்ட 50 ஜோய் இல்லங்களை' (Joy Homes) ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை வழங்கியுள்ளது...

தமிழ் சினிமாவில் நல்ல மாற்றங்கள் வரும் - ஜி.கே.எம்.தமிழ்குமரன் உறுதி
Monday March-16 2026

ஏசிஎம் சினிமாஸ் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரிக்க,   திரைப்பட கல்லூரி மாணவரான ஜெகன் ராயன் எழுதி இயக்கியுள்ள படம் ’ரூம் பாய்’...

Recent Gallery