தீபாவளியை முன்னிட்டு நாளை (அக்டோபர் 25) விஜயின் பிகில் மற்றும் கார்த்தின் கைதி ஆகிய இரண்டு படங்கள் வெளியாகின்றன. இதில், விஜயின் பிகில் படத்திற்கு சிறப்பு காட்சி திரையிட தயாரிப்பு தரப்பும் திட்டமிட்டிருந்த நிலையில், தமிழக அரசு சிறப்பு காட்சிக்கு அனுமதி மறுத்துவிட்டது.
சிறப்பு காட்சி என்ற பெயரில் டிக்கெட் விலையை பல மடங்கு உயர்த்தி விற்பனை செய்வதால் சிறப்பு காட்சிக்கு அனுமதி மறுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில், “அரசு நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு டிக்கெட் விற்பனை செய்யப்படும் என்று எழுத்துப் பூர்வமாக உத்தரவாதம் கொடுத்தால், சிறப்பு காட்சி குறித்து ஆலோசனை செய்யப்படும்” என்று தெரிவித்திருந்தார்.
இதனால், விஜய் ரசிகர்கள் அப்செட்டானதோடு, பிகில் படத்திற்கு சிறப்பு காட்சி இருக்குமா, இருக்காதா என்பது தெரியாமல் பெரும் கவலையில் இருந்தார்கள். மேலும், ஏஜிஎஸ் நிறுவனமும் சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்குமாறு அரசுக்கு கோரிக்கை கடிதம் எழுதியிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ‘பிகில்’ படத்தின் சிறப்புக் காட்சி குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ, தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று இரவு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் படங்களுக்கு சிறப்புக் காட்சிகள் இல்லை, என்று உறுதியாக கூறிவிட்டார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், சிறப்புக் காட்சிகளை ரத்து செய்யக் கூறி அறிக்கை அனுப்பப்பட்டுவிட்டது. முன்பதிவு செய்தவர்களுக்கு பணத்தை திருப்பி வழங்க வலியுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிக கட்டணம் வசூலிப்பது கட்டுப்படுத்தப்படும், என்று தெரிவித்துள்ளார்.
ஆக, ‘பிகில்’ படத்திற்கு சிறப்புக் காட்சி கிடையாது. விஜய்க்கு எதிராக அரசு மேற்கொண்ட இந்த நடவடிக்கையால் ரசிகர்கள் ரொம்பவே அப்செட்டாகியிருக்கிறார்கள்.
’கே.ஜி.எஃப்’, ‘காந்தாரா’, ‘சலார்’ போன்ற மாபெரும் வெற்றி படங்கள் மூலம் இந்திய திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாகவும், சாதனை படைப்புகளை தயாரிக்கும் நிறுவனமாகவும் பார்க்கப்படும் ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் மற்றொரு பிரமாண்டமான படைப்பாக உருவாகியுள்ளது ‘காந்தாரா - சாப்டர் 1’...
நடிகர் வெற்றி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'சென்னை ஃபைல்ஸ் - முதல் பக்கம்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது...
இளம் இசையமைப்பாளர் தரண் குமார் இசையில், பிரபல ராப் இசை கலைஞரான வாஹீசன் ராசய்யா எழுத்தில், சரிகமா ஒரிஜினல்ஸ் வெளியீடாக வெளியாகியுள்ள 'ச்சீ ப்பா தூ...