2001 ஆம் ஆண்டு கெளதம் மேனன் இயக்கத்தி வெளியான ‘மின்னலே’ படம் இசையமைப்பாளராக அறிமுகமான ஹாரிஷ் ஜெயராஜ், தனது முதல் படத்திலேயே பாடல்களை சூப்பர் டூப்பர் ஹீட்டாக்கியதோடு, முன்னணி இசையமைப்பாளர் இடத்தை குறுகிய காலத்திலேயே பெற்றார்.
தொடர்ந்து, ’மஜ்னு’, ‘12B', 'சாமுராய்’ என்று தொடர் ஹிட் பாடல்களைக் கொடுத்தவர் தற்போது படங்கள் இல்லாமல் இருக்கிறார். காரணம் சமீபகாலமாக ஹரிஷ் ஜெயராஜின் பாடல்கள் எடுபடாமல் போவதுதான். அதிலும், கடந்த மாதம் வெளியான ‘காப்பான்’ படத்தில் ஹரிஷ் ஜெயராஜின் இசை கடுமையாக விமர்சிக்கப்பட்டது. குறிப்பாக பின்னணி இசை படுமோசம் என்றே விமர்சிக்கப்பட்டது.
இந்த நிலையில், புதிய தொழில் ஒன்றில் களம் இறங்கியிருக்கும் ஹாரிஷ் ஜெயராஜ், இசையமைவிட அதற்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பதாக கோலிவுட்டில் பேச்சு அடிபடுகிறது.
அதாவது, தமிழகத்தில் உள்ள சில முக்கிய திரையரங்கங்களை ஹாரிஷ் ஜெயராஜ் லீஸுக்கு எடுத்து நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் உள்ள 4 ஸ்கீரின்கள் கொண்ட பிரபல திரையரங்கமே ஹாரிஷ் ஜெயராஜ் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுபோல தமிழகத்தின் சில திரையரங்குகளை லீஸுக்கு எடுத்து நடத்தி வரும் ஹாரிஷ் ஜெயராஜ், வெளிநாடுகளிலும் திரையரங்குகளை நடத்தும் முயற்சியில் இறங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
தற்போது விக்ரம் நடிப்பில் கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘துருவ நட்சத்திரம்’ படம் மட்டுமே ஹாரிஷ் ஜெயராஜிடம் உள்ளதாம். அதைதவிர அவரது கையில் வேறு படங்கள் இல்லை என்றும் கூறப்படுகிறது.
’கே.ஜி.எஃப்’, ‘காந்தாரா’, ‘சலார்’ போன்ற மாபெரும் வெற்றி படங்கள் மூலம் இந்திய திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாகவும், சாதனை படைப்புகளை தயாரிக்கும் நிறுவனமாகவும் பார்க்கப்படும் ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் மற்றொரு பிரமாண்டமான படைப்பாக உருவாகியுள்ளது ‘காந்தாரா - சாப்டர் 1’...
நடிகர் வெற்றி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'சென்னை ஃபைல்ஸ் - முதல் பக்கம்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது...
இளம் இசையமைப்பாளர் தரண் குமார் இசையில், பிரபல ராப் இசை கலைஞரான வாஹீசன் ராசய்யா எழுத்தில், சரிகமா ஒரிஜினல்ஸ் வெளியீடாக வெளியாகியுள்ள 'ச்சீ ப்பா தூ...