கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 சமீபத்தில் முடிவடைந்தது. இதில் ரசிகர்களின் பேவரைட் போட்டியாளர்களான கவின் மற்றும் லொஸ்லியா, பிக் பாஸ் வீட்டுக்குள் தீவிரமாக காதலித்தனர். இந்த காதலுக்கு லொஸ்லியாவின் தந்தை கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த போதிலும், லொஸ்லியாவும், கவினும் தொடர்ந்து காதலித்து வந்தார்கள்.
இதற்கிடையே, பணத்திற்காக பிக் பாஸ் வீட்டில் இருந்து கவின் பாதியில் வெளியேறிய போது லொஸ்லியா கதறி அழுதார். ”இன்னும் 10 நாட்கள் தானே, அதன் பிறகு வெளியே வந்து பார்த்துக்கலாம்” என்று கவில் அவருக்கு ஆறுதல் கூறினார்.
இதனால், பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு கவின் மற்றும் லொஸ்லியா தங்களது காதலை அறிவிப்பார்கள் என்று பிக் பாஸ் ரசிகர்கள் எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், அவர்கள் அதிர்ச்சியடையம் அளவுக்கு கவின், காதல் குறித்து பேசியிருக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பல சினிமா வாய்ப்புகளை பெற்றிருக்கும் கவின், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்டார். அப்போது அவரிடம், “எப்போது கல்யாணம்” என்று கேட்க, அதற்கு அவர், “இன்னும் செய்ய வேண்டிய கடமைகள் நிறைய இருக்கு. முதலில் அதற்கு தான் முக்கியத்துவம் கொடுப்பேன். காதல், கல்யாணம் பற்றி யோசிக்கவில்லை” என்று பதில் அளித்தார்.
அப்படியானால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் லொஸ்லியாவை துறத்தி துறத்தி கவின் காதலித்தது அனைத்தும் நாடகம் தான், என்பதை அவரே தற்போது சூசகமாக கூறிவிட்டார். மொத்தத்தில், பிக் பாஸ் நிகழ்ச்சியே நாடகம் தான் என்பது ரசிகர்களுக்கு தற்போது புரிந்திருக்கும்.
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட ’அமரன்’ திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது...
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...