Latest News :

விசிலோடு கொண்டாடுங்கள்! - ‘களவாணி 2’ வில்லன் நடிகரின் தீபாவளி வாழ்த்து
Sunday October-27 2019

தஞ்சை மக்களின் ஹீரோவாக இருக்கும் துரை சுதாகர், ‘களவாணி 2’ படத்தின் மூலம் வில்லன் நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும், தற்போது பல முன்னணி இயக்குநர்களின் படங்களில் நல்ல வேடங்களில் நடித்து வருகிறார்.

 

வில்லன், குணச்சித்திர வேடம், என்று எதுவாக இருந்தாலும் நடிக்க தயராக இருப்பவர், நல்ல கதைக்காகவும், இயக்குநர்களுக்காகவும் காத்துக் கொண்டிருக்கிறார். தஞ்சை மண்ணின் மனிதராக ‘களவாணி 2’ வில் வாழ்ந்து காட்டியவர், வழக்கறிஞர், தொழிலதிபர் மற்றும் சமூக ஆர்வலராக இருந்தாலும், தீவிர சினிமா ரசிகராகவே இருக்கிறார். தான் நடிகராக உருவெடுத்திருந்தாலும், தற்போது திரையரங்குகளுக்கு சென்று மக்களோடு மக்களாக படங்கள் பார்த்து வருகிறார்.

 

அந்த வகையில், விஜயின் ‘பிகில்’ படத்தை பார்த்தவர், விஜயின் மாறுபட்ட நடிப்பை பாராட்டுவதோடு, தீபாவளி திருநாளில் குடும்பத்தோடு பார்க்க வேண்டிய ஒரு படமாகவும், இளைஞர்களை குஷிப்படுத்தும் படமாகவும் ’பிகில்’ இருக்கிறது என்று, பாராட்டியிருப்பதோடு, விசில் அடித்து தீபாவளியை கொண்டாடுங்கள், என்று விஜய்  ரசிகர்களுக்கு ஸ்பெஷல் தீபாவளி வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

 

‘களவாணி 2’ படத்திற்குப் பிறகு அதேபோன்று ஒரு நல்ல கதாபாத்திரத்துடன் மீண்டும் தமிழக ரசிகர்களை சந்திக்க இருக்கும் துரை சுதாகர், மாஸ் ஹீரோ ஒருவரது படத்தில் வில்லனாக நடிக்க இருக்கிறாராம். 

 

Actor Durai Sudhakar

 

இந்த தீப திருநாள் முதல் தமிழ் சினிமாவில் வெளியாகும் அத்தனைப் படங்களும் வெற்றி பெற்று தமிழ் திரையுலகம் பிரகாசிக்க வேண்டும், என்று தனது தீபாவளி வாழ்த்தியில் குறிப்பிட்டவர், வித்தியாசமான மற்றும் நல்ல திரைப்படங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தரும் தமிழ் ரசிகர்களுக்கும் தனது தீபாவளி வாழ்த்தை தெரிவித்திருக்கிறார்.

Related News

5795

3 வருட உழைப்பு, 250 நாட்களுக்கு மேலான படப்பிடிப்பு! - கவனம் ஈர்க்கும் ‘காந்தாரா - சாப்டர் 1’ மேக்கிங்
Tuesday July-22 2025

’கே.ஜி.எஃப்’, ‘காந்தாரா’, ‘சலார்’ போன்ற மாபெரும் வெற்றி படங்கள் மூலம் இந்திய திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாகவும், சாதனை படைப்புகளை தயாரிக்கும் நிறுவனமாகவும் பார்க்கப்படும் ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் மற்றொரு பிரமாண்டமான படைப்பாக உருவாகியுள்ளது ‘காந்தாரா - சாப்டர் 1’...

’சென்னை ஃபைல்ஸ் - முதல் பக்கம்’ உணர்வுப்பூர்வமான கிரைம் திரில்லர் படமாக இருக்கும் - நடிகர் வெற்றி நம்பிக்கை
Monday July-21 2025

நடிகர் வெற்றி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'சென்னை ஃபைல்ஸ் - முதல் பக்கம்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது...

’ச்சீ ப்பா தூ...’ இசை ஆல்பத்தை பாராட்டிய நடிகர் கமல்ஹாசன்!
Monday July-21 2025

இளம் இசையமைப்பாளர் தரண் குமார் இசையில், பிரபல ராப் இசை கலைஞரான  வாஹீசன் ராசய்யா எழுத்தில்,  சரிகமா ஒரிஜினல்ஸ் வெளியீடாக வெளியாகியுள்ள 'ச்சீ ப்பா தூ...

Recent Gallery