தீபாவளியை முன்னிட்டு வெளியான கார்த்தியின் ‘கைதி’ மற்றும் விஜயின் ‘பிகில்’ இரண்டு படங்களும் வியாபார ரீதியாக வெற்றி பெற்றிருந்தாலும், அனைத்து தரப்பினரும் விரும்பும் படமாக கைதி அமைந்திருக்கிறது. அதே சமயம், விமர்சன ரீதியாக விஜயின் ‘பிகில்’ படத்தைக் காட்டிலும் கைதி படத்திற்கு பெரு வரவேற்பு கிடைத்திருக்கிறது.
மிகப்பெரிய பட்ஜெட்டில் தயராகியிருக்கும் பிகில் படத்தைவிட குறைவான பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் கைதி மிகப்பெரிய லாபத்தை ஈட்டித்தரும் என்று சினிமா வியாபாரிகள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. ரசிகர்களின் மவுத் டாக்கிலும் கைதிக்கு தான் முதலிடம். இப்படி அனைத்து ஏரியாவில் கைதி வெற்றி பிரபதிபலிப்பதை தொடர்ந்து நடிகர் விஜய் அதிரடி முடிவு ஒன்றை எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, ‘கைதி’ படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தற்போது விஜயின் 64 வது படத்தை இயக்கி வருகிறார். இப்படத்திற்குப் பிறகு அவர் கைதியின் இரண்டாம் பாகத்தை எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக கார்த்தியிடம் வெறும் 30 நாட்கள் கால்ஷீட் மட்டும் கேட்க, கார்த்தி மற்றும் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு இருவரும் ஓகே சொல்லியிருக்கிறார்கள்.
இந்த நிலையில், லோகேஷ் கனகரான் படத்தில் நடித்து வரும் விஜய், அவருடன் மற்றொரு படத்திலும் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார். இதற்காக லோகேஷ் கனகராஜ், சொன்ன கரு ஒன்றுக்கு ஓகேவும் சொல்லிவிட்டாராம். விஜயின் 64 வது படத்தை லோகேஷ் முடித்தப் பிறகு, விஜய் தனது 65 வது படத்திற்காக வேறு ஒரு இயக்குநருடன் இணைந்து பணிபுரிய, அதற்குள் லோகேஷ், முழு திரைக்கதையையும் தயாரி செய்துவிடுவாராம்.

மொத்தத்தில், விஜயின் 66 வது படம் லோகேஷ் கனராஜ் தான் இயக்குவார் என்று கூறப்படுகிறது. அதே சமயம், விஜயின் 64 வது படத்தின் ரிசல்டை பொருத்து, விஜையின் 65 வது படத்தை கூட லோகேஷ் கனகராஜ் இயக்க வாய்ப்பிருக்கிறதாம்.
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட ’அமரன்’ திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது...
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...