Latest News :

குடும்பங்கள் பாராட்டும் ‘கைதி’! - குஷியில் கார்த்தி
Monday October-28 2019

கார்த்தியின் நடிப்பில் வெளியாகியுள்ள ‘கைதி’ மிகப்பெரிய வெற்றிப் பெற்றிருப்பதோடு, பலதரப்பு மக்களும் பாராட்டும் படமாகவும் உருவெடுத்துள்ளது. கார்த்தியின் நம்பருக்கே போன் செய்து பல குடும்பங்கள் பாராட்டி வருகிறார்களாம். எப்படியோ அவரது போன் நம்பரை கண்டுபிடித்து, பாராட்டுபவர்கள் அனைவரிடமும் பேசி வரும் கார்த்தி, இதை மகிழ்ச்சியுடன் பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்துக் கொண்டார்.

 

‘கைதி’ வெற்றியால் பெரும் மகிழ்ச்சியில் இருக்கும் கார்த்தி, சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசுகையில், ”'கைதி' படம் எனக்கு முற்றிலும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது. படப்பிடிப்பு நடைபெறும் இடத்தில் அமைதியாக இருப்பதுதான் பொதுவான நாகரீகம். இது சில செட்டில் இருப்பதில்லை. நடிக்கும் போது அனைவருக்கும் அது தொந்தரவாக இருக்கும். ஆனால் இந்த செட்டில் அனைவரும் அமைதியாக இருந்தார்கள். இந்த கலாச்சாரத்தை இனிமேல் அனைவரும் பின்பற்றினால் நன்றாக இருக்கும். 

 

படம் முழுக்க லாரி ஓட்ட வேண்டுமென்பதால் ஒரு வாரம் பயிற்சி எடுத்தேன். நான் லாரி ஓட்டுவதைப் பார்த்த அனைவரும் லாவகமாக ஒட்டுகிறீர்கள் என்று வியந்து கேட்டார்கள். சினிமா என்றாலே எல்லாவற்றையும் பழகிக் கொள்ள வேண்டும் என்றேன். அந்த அனுபவத்தில் லாரி ஓட்டுவது எளிதல்ல என்பதை உணர்ந்தேன். இடது வலது என்று வளைத்து ஓட்டுவது மிகவும் கடினம். லாரியில் பயணம் செய்பவர்களை விட எல்லா வகையிலும் ஓட்டுனருக்கு தான் ஆபத்து அதிகம். மற்ற வாகனங்களை விட லாரி ஓட்டுவதற்கு மட்டுமல்ல லாரியில் இறங்கி ஏறுவதற்கு கூட அதிகமான சக்தி வேண்டும். லாரி ஓட்டுனர்களின் பெருமை இப்போது தான் புரிகிறது. தனது நிறுவனத்திற்காகவும் வாழ்க்கைக்காகவும் இரவு பகல் பாராமல் உழைக்கிறார்கள். அவர்களை நினைத்து பெருமை கொள்கிறேன். 

 

ரஜினிகாந்த், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் போல உச்சம் தொட்டவர்கள் அனைவரும் ஆன்மிகத்தில் ஈடுபாடு உள்ளவர்கள் தான். அது எப்பவும் நம்மை பாதுகாக்கும் ஒரு கருவியாக இருக்கும். ஆன்மிகத்தின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. ஆகையால், இயக்குநர் லோகேஷ் முதலிலேயே பட்டை போட வேண்டும் என்று கதையை எழுதிவிட்டார்.நான் வீட்டிலிருந்து எப்போது கிளம்ப்பினாலும் விபூதி பூசாமல் கிளம்பினது இல்லை. அது வளர்த்தவிதமாகக் கூட இருக்கலாம். படம் பார்த்து விட்டு.. என் நம்பரை எப்படியோ பிடித்து.. குடும்பம் குடும்பமாக பேசுகிறார்கள். முடிந்தவரை எல்லொரிடமும் பேசி விடுகிறேன். 

 

என் அப்பா திரையரங்கில் 'கைதி'யைப் பார்த்தார். சிறப்பான படம், அப்பா மகள் செண்டிமெண்ட் அனைவரிடமும் வெற்றியடையும். மற்றும் திரையரங்கப் பார்வையாளர்களுக்கான படம் என்றும் பாராட்டினார். எனக்கும் ஒரு மகள் இருப்பதால் இப்படத்தின் கதாபாத்திரத்தோடு சுலபமாக தொடர்புபடுத்திக்கொள்ள முடிந்தது.

 

நேற்று இயக்குநர் லோகேஷ் என்னைத் தொடர்பு கொண்டு 'கைதி' படத்தின் இரண்டாம் பாகத்திற்காக ('கைதி 2') 30 நாட்கள் கால்ஷீட் இருந்தால் முடித்து விடலாம் என்றார். அதுக்கு அவர் ரெடியாகதான் இருக்கிறார்.” என்றார்.

Related News

5798

3 வருட உழைப்பு, 250 நாட்களுக்கு மேலான படப்பிடிப்பு! - கவனம் ஈர்க்கும் ‘காந்தாரா - சாப்டர் 1’ மேக்கிங்
Tuesday July-22 2025

’கே.ஜி.எஃப்’, ‘காந்தாரா’, ‘சலார்’ போன்ற மாபெரும் வெற்றி படங்கள் மூலம் இந்திய திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாகவும், சாதனை படைப்புகளை தயாரிக்கும் நிறுவனமாகவும் பார்க்கப்படும் ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் மற்றொரு பிரமாண்டமான படைப்பாக உருவாகியுள்ளது ‘காந்தாரா - சாப்டர் 1’...

’சென்னை ஃபைல்ஸ் - முதல் பக்கம்’ உணர்வுப்பூர்வமான கிரைம் திரில்லர் படமாக இருக்கும் - நடிகர் வெற்றி நம்பிக்கை
Monday July-21 2025

நடிகர் வெற்றி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'சென்னை ஃபைல்ஸ் - முதல் பக்கம்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது...

’ச்சீ ப்பா தூ...’ இசை ஆல்பத்தை பாராட்டிய நடிகர் கமல்ஹாசன்!
Monday July-21 2025

இளம் இசையமைப்பாளர் தரண் குமார் இசையில், பிரபல ராப் இசை கலைஞரான  வாஹீசன் ராசய்யா எழுத்தில்,  சரிகமா ஒரிஜினல்ஸ் வெளியீடாக வெளியாகியுள்ள 'ச்சீ ப்பா தூ...

Recent Gallery