Latest News :

அடுத்த மாதம் உதயமாகும் கமலின் அரசியல் கட்சி
Thursday September-14 2017

ரஜினியை தொடர்ந்து கமல்ஹாசனும் அரசியலுக்கு வருவார், என்பது உறுதியாக உள்ள நிலையில், அவர் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர இருப்பதாக, பா.ஜ.க பிரமுகர் சுப்பிரமணிய சாமி கூறியிருந்தார். ஆனால், தற்போது உள்ள எந்த அரசியல் கட்சியிலும் கமல் சேரப்போவதில்லை என்று அவரது வட்டாரத்தில் பேச்சு அடிபடுவதுடன், அக்டோபர் மாதம் தனது புதிய அரசியல் கட்சியின் அறிவிப்பை கமல் வெளியிடலாம், என்றும் கூறப்படுகிறது.

 

அவ்வபோது ட்விட்டர் மூலம் அரசியல் கருத்து கூறி வரும் கமல்ஹாசன், தான் எப்போதோ அரசியல்லுக்கு வந்துவிட்டேன், என்று கூறியதோடு, தனது ரசிகர்களிடம் உங்களது விரல்களுக்கு விரைவில் வேலை வரலாம், தயாராக இருங்கள், என்றும் கூறியிருந்தார்.

 

இதற்கிடையே, கமல்ஹாசன் தனது அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை அடுத்த மாதம் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, ரஜினிகாந்த் கமல்ஹாசன் அரசியலுக்கு வந்தால் தனது ஆதரவு கமல்ஹாசனுக்கு தான் என்று நடிகர் விஷால் சொல்லியிருக்கிறார். அதேபோல், கமல்ஹாசனும் தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் நடிகர் சங்கம் ஆகியவற்றின் தேர்தலில் விஷாலை பரிந்துரை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

580

'TN 2026' படம் யாரையும் புண்படுத்தாது! - தம்பி ராமையா விளக்கம்
Saturday April-04 2026

‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து கே...

எங்கள் படம் பிரிந்தவர்களை சேர்த்து வைக்கும்! - ’பிரேக் ஃபாஸ்ட்’ (Break Fast) படக்குழு நம்பிக்கை
Saturday April-04 2026

’செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ஏ...

’மனிதன் தெய்வமாகலாம்’ படத்தின் இயக்குநரை பாராட்டிய செல்வராகவன்!
Friday April-03 2026

வி.ஒய்.ஓ.எம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சதீஷ் மற்றும் விஜயா சதீஷ் தயாரிப்பில், டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மனிதன் தெய்வமாகலாம்’...

Recent Gallery