கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில், வெற்றி மாறன் இயக்கத்தில் கடந்த அக்டோபர் 4 ஆம் தேதி வெளியான தனுஷின் ‘அசுரன்’ மிகப்பெரிய வெற்றி பெற்றிருப்பதோடு, இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறது. தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களான ரஜினி, கமல் ஆகியோரின் பாராட்டை பெற்றதோடு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் ‘அசுரன்’ படத்தையும், தனுஷின் நடிப்பு மற்றும் இயக்குநர் வெற்றி மாறனின் மேக்கிங்கையும் வெகுவாக பாராட்டினார்கள்.
விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் பெரும் வரவேற்பு பெற்றிருக்கும் ‘அசுரன்’ ரூ.100 கோடிக்கும் மேலாக வசூலித்திருக்கிறது. தற்போதும் பல திரையரங்குகளில் படம் ஓடிக்கொண்டிருக்கிறது.
இதற்கிடையே, தெலுங்கில் ரீமேக் ஆக உள்ள ‘அசுரன்’ படத்தில் தனுஷ் நடித்த கதாபாத்திரத்தில் வெங்கடேஷ் நடிக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. ஆனால், படத்தை யார் இயக்குவது என்ற தகவல் வெளியாகவில்லை.
இந்த நிலையில், பாலிவுட் சூப்பர் ஸ்டாரான் ஷாருக்கான், சமீபத்தில் ‘அசுரன்’ படத்தை பார்த்துவிட்டு தனுஷின் நடிப்பு மற்றும் வெற்றி மாறனின் மேக்கிங்கை பார்த்து மிரண்டுபோனதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் படத்தை ரீமேக் செய்ய விரும்பும் ஷாருக்கான், தனுஷ் வேடத்தில் நடிக்கவும் முடிவு செய்திருக்கிறாராம்.
ஷாருக்கானின் நெருங்கிய நண்பரும், பிரபல பாலிவுட் இயக்குநருமான கரண் ஜோஹர், சமீபத்தில் அசுரன் படத்தை பார்த்துவிட்டு, படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்திருந்த நிலையில், தற்போது ஒட்டு மொத்த பாலிவுட் சினிமாவும் அசுரன் படத்தை பார்க்க தயாராகி வருகிறதாம்.
நடிகர் வெற்றி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'சென்னை ஃபைல்ஸ் - முதல் பக்கம்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது...
இளம் இசையமைப்பாளர் தரண் குமார் இசையில், பிரபல ராப் இசை கலைஞரான வாஹீசன் ராசய்யா எழுத்தில், சரிகமா ஒரிஜினல்ஸ் வெளியீடாக வெளியாகியுள்ள 'ச்சீ ப்பா தூ...
ஜெ.டி.எஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில் மு...