Latest News :

சட்டமன்ற தேர்தலுக்காக ரஜினி போட்ட பிளான்! - புது கூட்டணி ரெடி
Tuesday October-29 2019

முருகதாஸ் இயக்கத்தில் ‘தர்பார்’ படத்தை முடித்துவிட்ட ரஜினிகாந்த் அடுத்ததாக சிவா இயக்கத்தில் நடிக்க இருக்கும் படம் பற்றியும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டார். ரஜினியின் 168 வது படமாக உருவாகும் இப்படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த் தனது அரசியல் கட்சி குறித்து அறிவிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 

ஏற்கனவே, தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் எப்போது வந்தாலும் போட்டியிடுவேன், என்று அறிவித்துள்ள ரஜினிகாந்த், தற்போது தொடர்ந்து படங்களில் நடிப்பதிலேயே கவனம் செலுத்தி வந்தாலும், மறுபக்கம் அரசியல் பணியிலும் அவர் கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது. பல மூத்த அரசியல் தலைவர்களுடன் அவ்வபோது ஆலோசனையில் ஈடுபட்டு வரும் ரஜினிகாந்த், இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்தில் தனது அரசியல் குறித்து அறிவிப்பார், என்றும் கூறப்படுகிறது.

 

இந்த நிலையில், அரசியல் கட்சி குறித்து அறிவித்தப் பிறகும் திரைப்படங்களில் நடிக்க முடிவு செய்திருக்கும் ரஜினிகாந்த், 2021 ஆம் ஆண்டு வர இருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலை குறி வைத்து ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும், இந்த படம் முழுக்க முழுக்க அரசியலைப் பற்றிய படமாக உருவாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

மேலும், இந்த படத்தை ‘பாகுபலி’ புகழ் இயக்குநர் ராஜமவுலி இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. ராஜமவுலியும் ரஜினியை வைத்து ஒரு படமாவது இயக்க வேண்டும் என்பது தனது ஆசை, என்று பல பேட்டிகளில் கூறி வந்தார். அதேபோல், அவரது பாகுபலி படம் இந்தியா சினிமாவையே அவர் பக்கம் இழுத்து விட்டது. தற்போது தெலுங்கில் ஒரு படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் ராஜமவுலி அப்படத்தை அடுத்த ஆண்டு மத்தியில் முடித்துவிடுவாராம். ரஜினியும், தனது 168 வது படத்தை அடுத்த ஆண்டு மத்தியில் முடித்துவிட்டு, ராஜமவுலியுடன் இணைய இருக்கிறாராம்.

 

Director Rajamouli

 

ரஜினிகாந்த் அரசியலில் செய்ய இருக்கும் அதிரடி மாற்றங்கள் குறித்து மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் உருவாக உள்ள இப்படம் தமிழ் சினிமாவுக்கான படமாக மட்டும் அல்லாமல், ஒட்டு மொத்த இந்திய சினிமாவுக்கான படமாகவும் உருவாக உள்ளதாம்.

Related News

5805

’எஸ்.கே.எஸ்’ பட முதல் பார்வை போஸ்டர் வெளியீடு!
Monday March-16 2026

அறிமுக நடிகைகள் தேவல்ல கவிதா, அன்னா ஆஷா, கீர்த்தி, சங்கீதா ஆகியோர் கதையின் நாயகிகளாக நடித்திருக்கும் ’எஸ் கே எஸ்’ (SKS) திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது...

இந்தியா முழுமைக்கும் ஜோய் ஆலுக்காஸின் சேவை விரிவடையும் - நடிகர் பிரஷாந்த் நம்பிக்கை
Monday March-16 2026

தமிழ்நாட்டில் உள்ள பின்தங்கிய குடும்பங்களுக்கு, புதிதாகக் கட்டப்பட்ட 50 ஜோய் இல்லங்களை' (Joy Homes) ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை வழங்கியுள்ளது...

தமிழ் சினிமாவில் நல்ல மாற்றங்கள் வரும் - ஜி.கே.எம்.தமிழ்குமரன் உறுதி
Monday March-16 2026

ஏசிஎம் சினிமாஸ் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரிக்க,   திரைப்பட கல்லூரி மாணவரான ஜெகன் ராயன் எழுதி இயக்கியுள்ள படம் ’ரூம் பாய்’...

Recent Gallery