டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்த விஷால், போராட்டதிலும் பங்கேற்றதுடன், தனது அறக்கட்டளை மூலம் விவசாயிகள் சிலரது குழந்தைகளில் படிப்புக்கும் உதவி செய்து வருகிறார்.
இந்த நிலையில், இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது தனது ‘துப்பறிவாளன்’ படத்தின் தியேட்டர் கலெக்ஷனில் இருந்து ஒரு தொகையை விவசாயிகளின் நலனுக்காக கொடுப்பதாக அறிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் சுமார் 350 க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் துப்பறிவாளன் வெளியாகியுள்ளது. இந்த தியேட்டர்களில் துப்பறிவாளன் எத்தனைக் காட்சிகள் நடைபெறுகிறதோ, அத்தனைக் காட்சிகளிலும் விற்கும் ஒவ்வொரு டிக்கெட்டின் வருமானத்தில் இருந்து விஷாலுக்கு போகும் பங்கில் இருந்து, ஒரு டிக்கெட்டுக்கு ஒரு ரூபாய் வீதம் என்று விவசாயிகளின் நலனுக்காக வழங்கப்பட உள்ளது.
விஷால் பிலிம் பேக்டரி மூலம் சொந்தமாக விஷால் தயாரித்துள்ள ‘துப்பறிவாளன்’ இன்று திரையிடப்பட்ட சிறப்பு காட்சிக்குப் பிறகு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள என்பது குறிப்பிடத்தக்கது.
‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து கே...
’செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ஏ...
வி.ஒய்.ஓ.எம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சதீஷ் மற்றும் விஜயா சதீஷ் தயாரிப்பில், டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மனிதன் தெய்வமாகலாம்’...