Latest News :

’கைதி’க்காக தியேட்டரில் நடந்த மோதல்! - கண்டுக்கொள்ளாத தயாரிப்பாளர்
Thursday October-31 2019

கார்த்தியின் ‘கைதி’ கடந்த 25 ஆம் தேதி வெளியாகி மாபெரும் வெற்றிப் பெற்றுள்ளது. விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் வெற்றிப் பெற்றிருக்கும் கைதி படத்திற்கு ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பை பார்த்து சென்னை உள்ளிட்ட தமிழகம் மட்டும் இன்றி வெளிநாடுகளில் தியேட்டர்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில், சென்னையில் உள்ள பிரபல தியேட்டர் ஒன்றில் ‘கைதி’ படத்திற்காக பெரிய மோதல் ஏற்பட்டுள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

 

சினிமா பி.ஆர்.ஓ-வான ஜான் என்பவர், சென்னை வடபழனியில் உள்ள பளோஸோ தியேட்டரில் கைதி படம் பார்த்திருக்கிறார். அப்போது அவர் முன் சீட்டில் உட்கார்ந்த சிலர் படத்தை செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். ரசிகர்களாக இருந்தால், ஏதோ ஒரு சில காட்சியை புகைப்படம் எடுப்பார்கள், ஆனால், அந்த நபரோ தொடர்ந்து தனது செல்போனில் வீடியோவாக படத்தை பதிவு செய்ய, அதைப் பார்த்த ஜான், இதுபோல எடுக்க கூடாது, நிறுத்துங்கள், என்று சொல்லியிருக்கிறார். அந்த இளைஞரும் படம் பிடிப்பதை நிறுத்தியுள்ளார்.

 

பிறகு இடைவேளையின் போது படத்தை படம் பிடித்த இளைஞர், தனது நண்பர்களுடன் சேர்ந்து பி.ஆர்.ஓ ஜானிடம் சண்டைப்போட இரு தரப்புக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டிருக்கிறது. பிறகு அங்கிருந்த சிலர் ஜானுக்கு துணையாக நின்று அவர் சொல்வதில் என்ன தவறு, தியேட்டரில் செல்போனில் வீடியோ எடுப்பது சரியா? என்று அந்த இளைஞர்களை கேள்வி கேட்க, அவர்கள் சத்தமில்லாமல் அங்கிருந்து சென்றுவிட்டார்களாம்.

 

இது குறித்து பி.ஆர்.ஓ ஜான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட, நெட்டிசன்களுடன் சினிமா பிரபலங்களும் ஜானின் செயலை பாராட்டி அவருக்கு வாழ்த்தும், நன்றியும் தெரிவித்து வருகிறார்கள்.

 

ஆனால், இந்த பதிவை பார்த்த கைதி படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு மட்டும் இதற்கு எந்தவித கமெண்டும் தெரிவிக்கவில்லை. பளோஸோ தியேட்டர் நிர்வாகம் கூட, செல்போனில் படம் பிடித்தவர்களை எதுவும் கேட்காமல் இருந்தது ஆச்சர்யமாக இருந்த நிலையில், தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவும் இது குறித்து கண்டனமோ அல்லது தனது படத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்த ஜானுக்கும் நன்றி தெரிவிக்காதது பேரதிர்ச்சியாகவே இருக்கிறது.

 

Related News

5810

இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் தொடக்க திரைப்படமாக தேர்வான ‘அமரன்’!
Saturday November-22 2025

ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட ’அமரன்’ திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது...

ரசிகர்கள் நிராகரிப்பு, காட்சிகள் ரத்து! - படுதோல்வியடைந்த கவினின் ‘மாஸ்க்’!
Saturday November-22 2025

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...

Recent Gallery