பிரபல காமெடி நடிகரும், டிவி நிகழ்ச்சி தொகுப்பாளருமான தாடி பாலாஜிக்கும், அவரது மனைவி நித்யாவுக்கும் கடந்த சில வருடங்களாக பிரச்சினை நடந்து வந்தது. இருவரும் ஒருவரை மாறி ஒருவர் மீது குற்றம் சாட்டி வந்த நிலையில், இருவரும் பிரிந்து வாழ தொடங்கினார்கள்.
இதற்கிடையே, பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்ற தாடி பாலாஜியும், நித்யாவும், அந்நிகழ்ச்சியில் ஒன்று சேர்ந்ததாக காட்டப்பட்டது. ஆனால், நிகழ்ச்சி முடிந்தப் பிறகு மீண்டும் இருவருக்கிடையும் பிரச்சினை ஏற்பட்டு காவல் நிலையம், நீதிமன்றம் என்று சென்றார்கள். தற்போது இருவரும் விவாகரத்துக்காக காத்திருக்கிறார்கள்.
இந்த நிலையில், தாடி பாலாஜி நித்யாவை திருமணம் செய்வதற்கு முன்பாகவே தீபா என்ற பெண்ணை திருமணம் செய்திருப்பதும், அவருக்கு ஒரு ஆண் மகன் இருப்பதும், பாலாஜியும், தீபாவும் விவாகரத்து பெற்றுவிட்டார்களாம். ஆனால், இருவருக்கும் இடையே மீண்டும் தொடர்பு ஏற்பட்டிருப்பதாக நித்யா குற்றம் சாட்டியுள்ளார்.
இதன் காரணமாகவே பாலாஜிக்கும், தனக்கும் இடையும் பிரச்சினை ஏற்பட்டதாகவும் நித்யா தெரிவித்துள்ளார். மகனுக்கு சைக்கிள் வாங்கி கொடுக்கிறேன், என்று தீபாவை சந்திக்க பாலாஜி சென்றாராம். அதில் இருந்து தான் நித்யாவுக்கும், பாலாஜிக்கும் இடையே பிரச்சினை எழுந்ததாம்.
அதே சமயம், தீபாவின் தற்போதைய கணவர், சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பாலாஜியை தீபா வீட்டுக்கு வரவேண்டாம் என எச்சரித்துள்ளார்.
நடிகர் வெற்றி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'சென்னை ஃபைல்ஸ் - முதல் பக்கம்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது...
இளம் இசையமைப்பாளர் தரண் குமார் இசையில், பிரபல ராப் இசை கலைஞரான வாஹீசன் ராசய்யா எழுத்தில், சரிகமா ஒரிஜினல்ஸ் வெளியீடாக வெளியாகியுள்ள 'ச்சீ ப்பா தூ...
ஜெ.டி.எஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில் மு...