Latest News :

‘கபடதாரி’ யில் இணைந்த பூஜா குமார்!
Saturday November-02 2019

கிரியேடிவ் என்டர்டெயினர்ஸ் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் சிபிராஜின் 'கபடதாரி' படத்தின் டைட்டிலில் துவங்கி, நடிக்கும் நடிக நடிகையர், பங்கேற்கும் தொழில் நுட்பக் கலைஞர்கள் பற்றிய செய்திகள் படம் பற்றிய எதிர்பார்ப்பை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதோ இந்த வரிசையில் இப்போது இன்னும் ஒரு செய்தி. 'விஸ்வரூபம்' படப்புகழ் பூஜா குமார் 'கபடதாரி' படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

 

கிரியேடிவ் என்டர்டெயினர்ஸ் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனத்தின் கிரியேடிவ் தயாரிப்பாளரான டாக்டர் ஜி.தனஞ்ஜெயன் இது குறித்து தெரிவிக்கையில், 'கபடதாரி' படத்தில் பூஜா குமார் இணைந்திருப்பது படத்திற்கு மேலும் பலம் சேர்க்கும் வகையில் அமைந்திருப்பதுடன், படத்தின் தீவிர தன்மையை மேலும் அதிகப்படுத்துகிறது. உண்மையில் சொல்லப்போனால் இந்த கதாபாத்திரம் கதையை ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு உயர்த்துவதுடன், பல திருப்பங்களையும் ஆச்சரியங்களையும் ஒருசேரத் தரும் வகையில் அமைந்ததாகும். 'விஸ்வரூபம்', 'உத்தம வில்லன்' மற்றும் ஆங்கிலப் படங்களில் பாராட்டுதல்களுக்குரிய வகையில் நடித்த பூஜா குமாருடன் பணியாற்றும் அனுபவத்துக்காக எங்கள் படக்குழு ஆர்வத்துடன் காத்திருக்கிறது" என்றார்.

 

படத்தின் தலைப்பு, திறமை மிகு நட்சத்திரப் பட்டாளம் முத்திரை பதிக்கும் தொழில் நுட்பக் கலைஞர்கள் ஒன்றிணைந்து எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கும் கபடதாரி படம் பற்றி தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயன் கூறுகையில், “பல திருப்பங்களுடன் கூடிய திரில்லர் வகைப்படம் கபடதாரி. படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும், இந்தத் திருப்பங்களில் ஏதேனும் ஒரு வகையில் தொடர்புள்ளவர்களாக இருப்பார்கள் என்பதுதான் இதன் சிறப்பு. அதிகபட்சம் இதை மட்டுமே என்னால் இப்போதைக்கு சொல்ல முடியும்.” என்றார்.

 

கிரியேடிவ் என்டர்டெயினர்ஸ் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனத்துக்காக லலிதா தனஞ்ஜெயன் தயாரிக்கும் கபடதாரி படத்தை சத்யா சைத்தான் படப்புகழ் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்குகிறார். டாக்டர் ஜி.தனஞ்ஜெயன் கிரியேடிவ் தயாரிப்பாளராகவும், என்.சுப்ரமணியம் நிர்வாகத் தயாரிப்பாளராகவும் பொறுப்பேற்றிருக்கின்றனர். சிபிராஜ், நந்திதா பிரதான வேடங்களில் நடிக்க நாசர், பூஜா குமார், ஜெயப்பிரகாஷ், ஜே.எஸ்.கே. ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

 

சைமன் கே.கிங் இசையமைக்க, ராசாமதி ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பு பணிகளை கே.எல்.பிரவீண் கவனிக்க, கலை இயக்குநராகப் பொறுப்பேற்றிருக்கிறார் விதேஷ். ஹேமந்த் ராவ் கதைக்கு ஜான் மகேந்திரன் மற்றும் டாக்டர் ஜி.தனஞ்ஜெயன் இருவரும் இணைந்து திரைக்கதை வசனம் எழுதுகின்றனர்.

 

வரும் நவம்பர் மாதம் ‘கபடதாரி’ படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளது. படத்தை 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளனது.

Related News

5812

இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் தொடக்க திரைப்படமாக தேர்வான ‘அமரன்’!
Saturday November-22 2025

ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட ’அமரன்’ திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது...

ரசிகர்கள் நிராகரிப்பு, காட்சிகள் ரத்து! - படுதோல்வியடைந்த கவினின் ‘மாஸ்க்’!
Saturday November-22 2025

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...

Recent Gallery