Latest News :

விடாது துறத்தும் பிளே பாய் நடிகர்! - சோகத்தில் அதிதி மேனன்
Saturday November-02 2019

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருந்தவர் அதிதி மேனன். ‘பட்டதாரி’, ‘களவாணி மாப்பிள்ளை’ போன்ற படங்களில் நடித்திருக்கும் இவர், அமீர் இயக்கத்தில் ஆர்யா ஹீரோவாக நடிக்கும் ‘சந்தனத்தேவன்’ படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தமானதும் சற்று பிரபலமடைந்ததோடு, ஏராளமான விளம்பரப் படங்களிலும் நடிக்க தொடங்கினார்.

 

இதற்கிடையே, இவருடன் பட்டதாரி என்ற படத்தில் ஹீரோவாக நடித்த அபி சரவணன், என்ற மதுரையை சேர்ந்த நடிகர் தனது வீட்டில் இருந்த பொருட்களை எடுத்துக் கொண்டு அதிதி மேனன், வேறு ஒரு காதலருடன் ஓடிவிட்டார் என்று புகார் அளித்ததோடு, தனக்கும் அதிதி மேனனுக்கும் திருமணம் நடந்துவிட்டதாக கூறி, அதற்கான போட்டோ மற்றும் வீடியோ ஆதாரங்களை வெளியிட்டார்.

 

அதிதி மேனன் தரப்பில் இருந்து, இதை மறுத்ததோடு, அபி சரவணனுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருக்கிறது. அவர் தன்னிடம் பண மோசடியில் ஈடுபட்டார், அதனாலேயே அவரிடம் இருந்து விலகினேன், என்ற பதில் வந்தது. இந்த பிரசின்னையில் இரு தரப்பும் மாறி மாறி, ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டினார்கள். பிறகு இந்த பிரச்சினை முவுக்கு வந்து அவர் அவர் வேலையை பார்க்க தொடங்கினார்கள்.

 

இந்த நிலையில், இந்த பிரச்சினையை தற்போது தொடர நினைக்கும் அபி சரவணனன், மதுரை குடும்பநல நீதிமன்றத்தில் அதிதி மேனனை தன்னுடன் சேர்த்து வைக்கும்படி கோரி வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது, அதிதி மேனனை நீதிபதி கவுன்சிலிங்கிற்கு வரும்படி தெரிவித்துள்ளார்.

 

ஆனால், அதற்கு அதிதி மேனன் தரப்பு மறுப்பு தெரிவித்ததோடு, இந்த வழக்கை உயர் நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்வதாக தெரிவிக்க, கோபமடைந்த நீதிபதி, “இது குடும்பநல நீதிமன்றம் இங்கு நாங்கள் சொல்வதை தான் கேட்க வேண்டும், கவுன்சிலிங்கிற்கு கட்டாயமாக ஆஜராக வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறாராம்.

 

Adithi Menon and Abi Saravanan

 

அபி சரவணனனிடம் இருந்து தப்பித்தால் போதும் என்று நினைத்த அதிதி மேனனுக்கு தற்போது நீதிமன்றம் மூலமாகவே அபி சரவணன் செக் வைத்திருக்க, இதில் இருந்து தப்பிப்பாரா அல்லது மீண்டும் அபி சரவணனின் பிடியில் சிக்குவாரா என்று பொருத்திருந்து பார்ப்போம்.

Related News

5813

இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் தொடக்க திரைப்படமாக தேர்வான ‘அமரன்’!
Saturday November-22 2025

ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட ’அமரன்’ திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது...

ரசிகர்கள் நிராகரிப்பு, காட்சிகள் ரத்து! - படுதோல்வியடைந்த கவினின் ‘மாஸ்க்’!
Saturday November-22 2025

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...

Recent Gallery