ராஜ் கிரண் ஹீரோவாக நடித்து தயாரித்த ‘என் ராசாவின் மனசுல’ படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமான மீனா, அதன் பிறகு ரஜினி, கமல், விஜயகாந்த் என்று 80 களின் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்ததோடு, 90 களில் முன்னணி ஹீரோவாக உருவெடுத்த அஜித் உள்ளிட்டவர்களுடனும் ஜோடியாக நடித்தார்.
தற்போது திருமணத்திற்குப் பிறகும் மலையாளப் படங்களில் ஹீரோயினாக நடித்து வரும் மீனா, தமிழ்ப் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், ‘என் ராசாவின் மனசுல’ மற்றும் ‘பாசமுள்ள பாண்டியரே’ படங்களுக்குப் பிறகு சுமார் 28 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ராஜ்கிரணுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கிறார். ’குபேரன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படம், தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் உருவாகிறது.
தமிழ் சினிமாவில் ஹீரோக்களுக்கு நிகராண குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் ராஜ்கிரண், இப்படத்தின் மூலம் முதல் முறையாக மலையாள படத்தில் நடிக்கிறார். ரஜ்கிரணுடன் மம்மூட்டியும் இப்படத்தில் நடிக்கிறார்.
நடிகர் வெற்றி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'சென்னை ஃபைல்ஸ் - முதல் பக்கம்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது...
இளம் இசையமைப்பாளர் தரண் குமார் இசையில், பிரபல ராப் இசை கலைஞரான வாஹீசன் ராசய்யா எழுத்தில், சரிகமா ஒரிஜினல்ஸ் வெளியீடாக வெளியாகியுள்ள 'ச்சீ ப்பா தூ...
ஜெ.டி.எஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில் மு...