Latest News :

தொடரும் முருகதாஸுடனான மோதல்! - நயன்தாராவின் அதிரடி ஸ்டேட்மெண்ட்
Tuesday November-05 2019

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸுக்கும், நடிகை நயன்தாராவுக்கும் ‘கஜினி’ படத்தின் போது மோதல் வெடித்து. அதில் இருந்து நயன்தாராவை தனது படத்தில் நடிக்க வைப்பதில்லை என்று முடிவு செய்திருந்த முருகதாஸ், ரஜினியின் வேண்டுகோளுக்கு இணங்கி, ‘தர்பார்’ படத்தில் நடிக்க வைத்திருக்கிறார். நயனும் ரஜினிக்காகவே அப்படத்தில் நடித்து வருகிறார்.

 

இதற்கிடையே, ‘தர்பார்’ படத்தின் இறுதி நாள் படப்பிடிப்பின் போது தனக்கு வர வேண்டிய சம்பள பாக்கி வராததால், படப்பிடிப்பில் கலந்துக்கொள்ளாமல் ஓட்டல் அறையிலேயே நயன்தாரா, இருந்தாராம். எவ்வளவோ அவரிடம் எடுத்துக்கூறியும் அவர் கையில் பணம் வந்தால் தான் படப்பிடிப்புக்கு வருவேன், என்பதில் பிடிவாதம் பிடிக்க, ஒரு கட்டத்தில் அவருக்காக காத்திருந்த ரஜினிகாந்தே கடுப்பாகிவிட்டாராம். உடனே பணத்திற்கு தான் பொறுப்பு என்று இயக்குநர் முருகதாஸ், நயன்தாராவிடம் நேரடியாக சொல்ல அதன் பிறகு படப்பிடிப்பில் கலந்துக் கொண்டாராம்.

 

முருகதாஸும் சொன்னதுபோலவே அன்றைய தினமே தயாரிப்பு தரப்பிடம் இருந்து நயன்தாராவுக்கு கிடைக்க வேண்டிய தொகையை பெற்றுக்கொடுக்க விஷயத்தை அறிந்த லைகா நிறுவனம் நயனினி மீது பெரும் கோபம் கொண்டதோடு, இனி தனங்களது நிறுவனம் தயாரிக்கும் படங்களில் அவரை நடிக்க வைக்க கூடாது, என்ற முடிவுக்கு வந்துவிட்டார்களாம்.

 

இப்படி ஒரு சம்பவம் பற்றிய தகவல் வெளியானதால் நயன்தாரா அப்செட்டாகிவிட்டாராம். மேலும், இதை ஏ.ஆர்.முருகதாஸ் தான் லீக் செய்திருப்பார் என்று நினைத்தவர், முருகதாஸ் மீது கடும் கோபமடைந்தாராம். சில நாட்களுக்குப் பிறகு இந்த பிரச்சினை ஆறிப்போய்விட்டது. இது குறித்து கோலிவுட்டில் பேசுவதும் நின்றுவிட்டது.

 

இந்த நிலையில், நயன்தாரா இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது தனக்கு இருக்கும் கோபத்தை சமீபத்திய பேட்டி ஒன்றில் வெளிப்படுத்தியுள்ளார்.

 

அதாவது, தனது கேரியரில் தான் செய்த தவறு முருகதாஸின் ‘கஜினி’ படத்தில் நடித்தது தான், என்று நயன்தாரா பேட்டியில் கூறியுள்ளார். காரணம், முருகதாஸ் நயன்தாராவிடம் அவர் கதாபாத்திரம் குறித்து சொன்ன விதமும், படத்தில் அவரை காட்டிய விதமும் மிகப்பெரிய வேறுபாடோடு இருந்ததாம். அதில் இருந்து தான் கதை தேர்வில் அதிகம் கவனம் செலுத்த ஆரம்பித்தாராம்.

 

‘கஜினி’ படத்திற்குப் பிறகு நயன்தாராவின் மார்க்கெட் உயர்ந்தாலும், தான் செய்த தவறாக கஜினி படத்தில் நடித்ததை நயன் கூறியிருப்பது அவருக்கு முருகதாஸின் மீது இருக்கும் கோபம் இன்னும் குறையவில்லை, என்பதை தான் காட்டுகிறது.

Related News

5818

இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் தொடக்க திரைப்படமாக தேர்வான ‘அமரன்’!
Saturday November-22 2025

ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட ’அமரன்’ திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது...

ரசிகர்கள் நிராகரிப்பு, காட்சிகள் ரத்து! - படுதோல்வியடைந்த கவினின் ‘மாஸ்க்’!
Saturday November-22 2025

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...

Recent Gallery