Latest News :

விஜய் சேதுபதியின் 41 வது பிறந்தநாள்! - 41 ஆயிரம் பனை விதைகளை விதைத்த ரசிகர்கள்
Tuesday November-05 2019

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான விஜய் சேதுபதி படத்தில் நடிப்பது மட்டும் இன்றி நிஜ வாழ்க்கையிலும் இயல்பானவராக இருப்பதாலேயே அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார். அதே சமயம் தனது ரசிகர்களையும் இயல்பாக இருக்குமாறு வலியுறுத்தும் விஜய் சேதுபதி, தான் வரும்போது பட்டாசு வெடிப்பது, போஸ்டர் ஒட்டுவது என்ற பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் எந்த செயலையும் செய்யக் கூடாது, என்று தனது ஒவ்வொரு நிகழ்ச்சியில் கூறி வருகிறார்.

 

அதற்கு ஏற்றவாறு விஜய் சேதுபதியின் ரசிகர்களும், விவசாயிகளுக்கு உதவும் வகையில் பல்வேறு நலத்திட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். சமீபத்தில் தனது ஒரு ஏக்கர் நிலத்தில் பயிர் வைக்க பணம் இல்லாமல் வட்டிக்கு பணம் வாங்க முயன்ற ஒரு விவாசயிக்கு பயிர் வைப்பதற்கான அனைத்து செலவுகளையும் விஜய் சேதுபதி ரசிகர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.

 

இந்த நிலையில், வரும் ஜனவரி 16 ஆம் தேதி விஜய் சேதுபதியின் 41 வது பிறந்தநாள் கொண்டாடப்பட இருக்கிறது. இதன் ஒரு பகுதியாகவும், வரும் நவம்பர் 15 ஆம் தேதி வெளியாகும் விஜய் சேதுபதியின் ‘சங்கத்தமிழன்’ படத்தின் ரிலீஸை முன்னிட்டும் மேலும் பல விவசாய நலத்திட்ட பணிகளை மேற்கொண்டு வரும் விஜய் சேதுபதி ரசிகர்கள் மன்றத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த ரசிகர்கள், நீர் வளத்தை மேம்படுத்தும் வகையில், மணிமங்கலம் ஏறி கரசங்காலில் 41 ஆயிரம் பனை விதைகளை விதைத்துள்ளனர்.

 

Vijay Sethupathi 41st birthday celebration

 

சமீபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், ’மே 17’ இயக்க தலைவர் திருமுருகன் காந்தி சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு, விஜய் சேதுபதி ரசிகர்களுடன் இணைந்து பனை விதைகளை விதைத்தார்.

 

Thirumurugan Gandhi in Vijay Sethupathi event

Related News

5819

’சென்னை ஃபைல்ஸ் - முதல் பக்கம்’ உணர்வுப்பூர்வமான கிரைம் திரில்லர் படமாக இருக்கும் - நடிகர் வெற்றி நம்பிக்கை
Monday July-21 2025

நடிகர் வெற்றி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'சென்னை ஃபைல்ஸ் - முதல் பக்கம்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது...

’ச்சீ ப்பா தூ...’ இசை ஆல்பத்தை பாராட்டிய நடிகர் கமல்ஹாசன்!
Monday July-21 2025

இளம் இசையமைப்பாளர் தரண் குமார் இசையில், பிரபல ராப் இசை கலைஞரான  வாஹீசன் ராசய்யா எழுத்தில்,  சரிகமா ஒரிஜினல்ஸ் வெளியீடாக வெளியாகியுள்ள 'ச்சீ ப்பா தூ...

Recent Gallery