Latest News :

ஆழ்கடலில் படமாகும் ‘ஜூவாலை’!
Tuesday November-05 2019

இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் உள்ள ஆழ்கடல் பகுதியில் படமாகி வரும் படம் ‘ஜுவாலை’. இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் உள்ள தீவுகளிலும், ஆழ்கடல் பகுதிகளிலும் 75 சதவீதம் படமாக்கப்பட்டிருக்கும் இப்படம் மிகப்பெரிய பொருட்ச்செலவில் பிரம்மாண்டமான கடல் மற்றும் அதைச் சார்ந்த கதைக்களப் படமாக உருவாகி வருகிறது.

 

மனுஷா தயாரிக்கும் இப்படத்தை ரஹ்மான் ஜிப்ரீல் இயக்கி, ஹீரோவாகவும் நடிக்கிறார். இவர் பாலுமகேந்திரா மற்றும் ஜோதி கிருஷ்ணா ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.

 

தன் முதல் படம் கடலைச் சார்ந்தும், சூழ்நிலைகளைச் சார்ந்தும் படமாக்க வேண்டி இருப்பதால், பெரிய ஹீரோக்களை வைத்து இயக்குவதில் உள்ள சிரமங்களை உணர்ந்தவர் அதற்காக, தானே நீண்ட முடி, தாடி சகிதம் தயாராகி உள்ளார். 

 

கடல் என்ற கதைக்களத்தை கையில் எடுத்து இருந்தாலும், ’ஜூவாலை’ என பெயர் வைத்து இருப்பதில் ஒரு ஆழமான கருத்தை அடக்கியுள்ளது இந்தப் படம் என்கிறார் இயக்குநர் ரஹமான் ஜிப்ரீல்.

 

காதல், காமம், கோபம், வெறுப்பு போன்றவை ஒரு ஜூவாலை மாதிரிதான்.. நமக்குள்ளே கொழுந்துவிட்டு எரிந்து கொண்டே இருக்கிறது.

 

அதில் பழிவாங்குதலும் ஒரு ஜூவாலை தான். நமக்கான வாழ்வாதாரமாகக் கொடுக்கப்பட்டுள்ள உடல், கடல் மாதிரி இருந்தாலும் அதன் உள்ளடக்கமாக இருக்கும் உணர்வுகள் நன்மை, தீமை அடங்கிய ஜூவாலையை வெளிப்படுத்திக் கொண்டே தான் இருக்கிறது.

 

நமது உடமை, உரிமை ஏதாவது ஒன்றிற்கு இழப்பு, பாதிப்பு வரும்போது அங்கு பழிவாங்கும் ஜூவாலை பற்றி எரிய வேண்டியது அவசியமாகிறது.

 

ஹீரோ தனது வாழ்விடத்தின் பழிவாங்குதலை ஜூவாலை ஆக்குகிறான்.. அது கடல் என்ற கதைக்களத்தில் வெளிப்படுகிறது என்கிறார் இயக்குநர் ரஹமான்.

 

ஹாலிவுட் கேமராமேன் மைக்முஸ் சாம்ப் ஆழ்கடல் காட்சிகளைப் படம்பிடித்து வருகிறார். லண்டனை சேர்ந்த இவர், ’பிரின்ஸ் ஆஃப் த சிட்டி’, ’பைலட் கஃபே’ போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். முதன் முறையாக ஒரு தமிழ் படத்திற்கு பணியாற்றுகிறார்.

 

விறுவிறுப்பான படப்பிடிப்பில் இருக்கும் ‘ஜுவாலை’ இந்தியப் பெருங்கடலைச் சுற்றியுள்ள தீவுகளில் வளர்ந்து வருகிறது.


Related News

5820

’சென்னை ஃபைல்ஸ் - முதல் பக்கம்’ உணர்வுப்பூர்வமான கிரைம் திரில்லர் படமாக இருக்கும் - நடிகர் வெற்றி நம்பிக்கை
Monday July-21 2025

நடிகர் வெற்றி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'சென்னை ஃபைல்ஸ் - முதல் பக்கம்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது...

’ச்சீ ப்பா தூ...’ இசை ஆல்பத்தை பாராட்டிய நடிகர் கமல்ஹாசன்!
Monday July-21 2025

இளம் இசையமைப்பாளர் தரண் குமார் இசையில், பிரபல ராப் இசை கலைஞரான  வாஹீசன் ராசய்யா எழுத்தில்,  சரிகமா ஒரிஜினல்ஸ் வெளியீடாக வெளியாகியுள்ள 'ச்சீ ப்பா தூ...

Recent Gallery