பிக் பாஸ் சீசன் 3 முடிவடைந்தாலும், அப்போட்டியில் நடந்த சர்ச்சையான விஷயங்களுக்கு மட்டும் முடிவே இல்லாமல் தொடர்ந்துக் கொண்டிருக்கிறது. அதிலும், பிக் பாஸ் வீட்டில் கத்தியால் கையை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்ற மதுமிதா, போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு, தொலைக்காட்சி நிர்வாகம் புகார் அளிக்க, தொலைக்காட்சி நிர்வாகமோ அவர் மீது போலீசில் புகார் அளித்தது.
தற்போது, பிக் பாஸின் மற்றொரு போட்டியாளரான மீரா மிதுன், தொலைக்காட்சி நிர்வாகம் தனக்கு இதுவரை ஒரு ரூபாய் கூட தரவில்லை. மேலும், தொடர்புகொண்டால் பதிலும் சொல்வதில்லை, என்று குற்றம் சாட்டி வருகிறார்.
இந்த நிலையில், மதுமிதா தற்போது தர்ஷன் மீது புதிய புகார் ஒன்றை தெரிவித்துள்ளார். அதாவது, அவர் கையை அறுத்துக் கொண்டபோது தர்ஷன், சாண்டி, கவின் ஆகியோர் அருகில் இருந்தும், முதலுதவி கூட செய்யவில்லையாம். இதை பல பேட்டிகளில் அவர் சொல்லியிருக்கிறார். அவரது பேட்டியை பார்த்து தர்ஷனின் காதலியான ஷனம் ஷெட்டி, தர்ஷன் பிக் பாஸ் வீட்டில் இருந்து வந்ததும், தங்களிடம் மன்னிப்பு கேட்க சொல்கிறேன், அப்படி அவர் மன்னிப்பு கேட்கவில்லை என்றால், அவர் மனுஷனே இல்லை, என்று மதுமிதாவிடம் கூறினாராம்.
இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறிய மதுமிதா, இதுவரை தர்ஷன் தன்னிடம் மன்னிப்பு கேட்கவில்லை, என்று கூறியிருக்கிறார்.
அப்படியானால் தர்ஷன் மனுஷனே இல்லை, என்பதை தான் மதுமிதா மறைமுகமாக சொல்லியிருக்கிறார்.
நடிகர் வெற்றி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'சென்னை ஃபைல்ஸ் - முதல் பக்கம்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது...
இளம் இசையமைப்பாளர் தரண் குமார் இசையில், பிரபல ராப் இசை கலைஞரான வாஹீசன் ராசய்யா எழுத்தில், சரிகமா ஒரிஜினல்ஸ் வெளியீடாக வெளியாகியுள்ள 'ச்சீ ப்பா தூ...
ஜெ.டி.எஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில் மு...