Latest News :

இயக்குநரான தயாரிப்பாளர் தனஞ்செயன்!
Wednesday November-06 2019

நிர்வாக தயாரிப்பாளராக தனது சினிமா பயணத்தை தொடங்கிய தனஞ்செயன், இன்று தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவராக இருப்பதோடு, ஒரு படத்தை எப்படி மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும், என்பதை அறிந்த தயாரிப்பாளர்களில் முக்கியமானவராகவும் திகழ்கிறார்.

 

தயாரிப்பாளராக மட்டும் இன்றி நல்ல சினிமா விமர்சகராகவும் திகழும் தனஞ்செயன் இரண்டு தேசிய விருதுகள் பெற்றிருப்பதோடு, ஃபாப்டா என்ற பெயரில் திரைப்பட பயிற்று மையம் ஒன்றையும் வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.

 

தற்போது ஃபாப்டா மீடியா ஒர்க்ஸ் மற்றும் கிரியேட்டிவ் எண்டர்டெயினர்ஸ் (BOFTA MEDIAWORKS & Creative Entertainers) என்ற இரு நிறுவனங்கள் மூலம் நல்ல படங்களை தயாரித்து வெளியிட்டு வருபவர்,  விரைவில் படம் ஒன்றை இயக்க இருக்கிறார்.

 

தான் தயாரிக்கும் அனைத்துப் படங்களின் கதை விவாதங்களில் பெற்ற அனுபவம் மற்றும் ஃபாப்டா சினிமா பயிற்சி மையம் மூலம் பல சினிமா ஜாம்பவான்களின் அனுபவங்களை அறிந்துக்கொண்டவர், அதன் மூலம் தான் எழுதிய கதைக்கு திரைக்கதை எழுதியிருக்கிறார். சுமார் 4 மாதங்களாக தனது குழுவினருடன் இணைந்து உருவாக்கிய திரைக்கதையை பல சினிமா பிரபலங்களிடம் சொன்னபோது, அவர்கல் வெகுவாக பாராட்டியதோடு, அவர் இயக்கும் படத்தில் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளனர்.

 

இதனை தொடர்ந்து தான் இயக்கும் படத்தின் படப்பிடிப்பை வரும் 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்க முடிவு செய்திருக்கும் தனஞ்செயன், படத்தில் நடிப்பவர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் விபரங்களை விரைவில் அறிவிக்க உள்ளார்.

Related News

5827

’சென்னை ஃபைல்ஸ் - முதல் பக்கம்’ உணர்வுப்பூர்வமான கிரைம் திரில்லர் படமாக இருக்கும் - நடிகர் வெற்றி நம்பிக்கை
Monday July-21 2025

நடிகர் வெற்றி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'சென்னை ஃபைல்ஸ் - முதல் பக்கம்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது...

’ச்சீ ப்பா தூ...’ இசை ஆல்பத்தை பாராட்டிய நடிகர் கமல்ஹாசன்!
Monday July-21 2025

இளம் இசையமைப்பாளர் தரண் குமார் இசையில், பிரபல ராப் இசை கலைஞரான  வாஹீசன் ராசய்யா எழுத்தில்,  சரிகமா ஒரிஜினல்ஸ் வெளியீடாக வெளியாகியுள்ள 'ச்சீ ப்பா தூ...

Recent Gallery