தான் நடிக்கும் படங்களின் நிகழ்ச்சிகளிலேயே கலந்துக் கொள்ளாத அஜித், சினிமா உள்ளிட்ட எந்த தொடர்புடைய பொது நிகழ்ச்சிகளிலும் கலந்துக்கொள்வதில்லை. ஏற்கனவே கலைஞரை பாராட்ட நடைபெற்ற திரையுலக விழாவில், கலந்துக் கொள்ளும்படி மிரட்டுகிறார்கள், என்று மேடையிலேயே தைரியமாக பேசிய அஜித், அதில் இருந்து எந்தவிதமான நிகழ்வுகளில் கலந்துக்கொள்வதில்லை.
இந்த நிலையில், அஜித் தனது முடிவை மாற்றிக் கொண்டு இம்மாதம் நடைபெற உள்ள பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆம், கமலின் 60 ஆம் ஆண்டு சினிமா பயணத்தை கொண்டாடும் வகையில் நவம்பர் 17 ஆம் தேதி இளையராஜா இசையோடு பிரம்மாண்டமான கலை நிகழ்ச்சி சென்னையில் நடைபெற உள்ளது. இதில், ரஜினி, விஜய் கலந்துக் கொள்ள இருக்கும் நிலையில், தற்போது அஜித்தும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க சம்மதம் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நவம்பர் 7 ஆம் தேதி கமலின் 65 வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. அவரது 65 வது பிறந்தநாள் மற்றும் அவரது சினிமா வாழ்க்கையின் 60 ஆண்டுகள் நிறைவையும் கொண்டாடும் விதமாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம்.
நடிகர் வெற்றி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'சென்னை ஃபைல்ஸ் - முதல் பக்கம்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது...
இளம் இசையமைப்பாளர் தரண் குமார் இசையில், பிரபல ராப் இசை கலைஞரான வாஹீசன் ராசய்யா எழுத்தில், சரிகமா ஒரிஜினல்ஸ் வெளியீடாக வெளியாகியுள்ள 'ச்சீ ப்பா தூ...
ஜெ.டி.எஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில் மு...