கார்த்தியின் நடிப்பில் கடந்த அக்டோபர் 25 ஆம் தேதி வெளியான ‘கைதி’ மிகப்பெரிய வெற்றி பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரித்திருக்கும் இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கிறார்.
முழுக்க முழுக்க இரவில் படமாக்கப்பட்ட இப்படம் விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் பெரும் வரவேற்பு பெற்றதோடு, வெளியான அனைத்து ஏரியாக்களிலும் நல்ல வரவேற்பு பெற்றிருக்கிறது. தமிழகம் மட்டும் இன்றி, வெளிநாடுகளிலும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததோடு, வசூல் ரீதியாகவும் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறது.
இந்த நிலையில், படம் வெளியாகி 12 நாட்களில் ரூ.80 கோடி வசூலித்திருக்கிறது. தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட இந்தியா மட்டும் இன்றி வெளிநாடுகளிலும் சேர்த்து 12 நாட்களில் 80 கோடி ரூபாய் வசூலித்திருக்கும் ‘கைதி’ இன்னும் சில தினங்களில் ரூ.100 கோடியை தாண்டிவிடும் என்பதால், விரைவில் கார்த்தி ரூ.100 கோடி வசூல் ஹீரோக்களின் பட்டியலில் இடம் பிடிக்கப் போகிறார்.
ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா, தனுஷ் ஆகியோர் இடம்பிடித்திருந்த இந்த பட்டியலில் தற்போது கார்த்திக்கும் இடம் கிடைக்கப் போகிறது.
மேலும் குறைவான பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதால் படத்தை தயாரித்தவர்களுக்கு மட்டும் இன்றி, இப்படத்தின் வியாபாரத்தில் இணைந்த அத்தனை பேருக்கும் இரட்டிப்பு லாபம் கிடைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
நடிகர் வெற்றி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'சென்னை ஃபைல்ஸ் - முதல் பக்கம்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது...
இளம் இசையமைப்பாளர் தரண் குமார் இசையில், பிரபல ராப் இசை கலைஞரான வாஹீசன் ராசய்யா எழுத்தில், சரிகமா ஒரிஜினல்ஸ் வெளியீடாக வெளியாகியுள்ள 'ச்சீ ப்பா தூ...
ஜெ.டி.எஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில் மு...